ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நகுல், தினேஷ் நடித்து வெளியான படம் தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும். இந்த படத்தில் அவர்களுக்கு ஜோடிகளாக பிந்து மாதவி, ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடித்தனர். இதில் நகுலுக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா தத்தா கொல்கத்தாவை சேர்ந்தவர். ஆனபோதும், அந்த படத்தில் அவரது நடிப்பு பேசப்பட்டதால், தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படத்தில் இரண்டு ஹீரோயினிகளில் ஒருவராக நடிக்கிறார் அவர்.
இதே படத்தில் காஜல்அகர்வாலும் ஹீரோயினியாக நடித்தபோதும் ஐஸ்வர்யா தத்தாவுக்கும் அவருக்கு இணையான வேடத்தை கொடுத்துள்ளாராம் சுசீந்திரன். இன்னும் பெயரிடப்படாத அந்த படத்தில் சிட்டி கேர்ளாக மாடர்ன் கெட்டப்பில் நடித்துள்ள ஐஸ்வர்யா தத்தா மொத்தம் 25 நாட்கள் கால்சீட் கொடுத்துள்ளார். ஆரம்பத்தில் சென்னையில் அப்படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது விஷாலுடன் அவர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விரைவில் மதுரையில் நடக்கும் படப்பிடிப்புக்கு செல்ல தயாராகிக்கொண்டிருக்கிறார் அவர்.