ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
2015ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் பட்டியலில், காக்கா முட்டை மற்றும் குற்றம் கடிதல் படங்களுக்கு விருது கிடைக்க வாய்ப்புள்ளது. தனுஷின் பட நிறுவனமும், இயக்குனர் வெற்றி மாறனின் பட நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம் காக்கா முட்டை. மணிகண்டன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில் ரமேஷ், ரமேஷ் திலகநாதன், விக்னேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ஸ்லம் ஏரியாவில் குழந்தைகள் சிலரின் பீட்ஸா ஆசை தான் காக்கா முட்டை படம். இப்படம் முடிந்து கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. ஆனால் இன்னும் ரிலீஸாகவில்லை. அதேசமயம், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருது பெற்றுள்ளது.
இதேபோல், பள்ளி மாணவனுக்கும்,ஆசிரியைக்கும் நடந்த யதார்த்தமான சம்பவம், அதன் பின்விளைவுகள் என்ன ஆகிறது, பெற்றோருக்கும், மற்றோருக்கும் நடக்கிற விஷயங்களை சமூகம் சார்ந்து சொல்கிற படம் தான் குற்றம் கடிதல். ஜி.பிரம்மா என்பவர் இயக்கி இருக்கிறார். இப்படமும் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை வாங்கியுள்ளது.
இந்நிலையில், 2015ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் பட்டியலில், காக்கா முட்டையும், குற்றம் கடிதல் படமும் தேர்வாகியுள்ளது. குழந்தைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த இரண்டு படங்களுக்கும் இந்தாண்டு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற மார்ச் 24ம் தேதி தேசிய விருது அறிவிப்புகள் வௌியாக இருக்கிறது.