ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அபிஷேக் பச்சன் நடிப்பில் உருவாகியுள்ள ஆல் இஸ் வெல் படம், வரும் ஜூலை 3ம் தேதி ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அபிஷேக் பச்சனின் ஆல் இஸ் வெல் மற்றும் சல்மான் கானின் ஹீரோ படம், ஒரே நாளில் வெளியாகி முட்டி மோதிக்கொள்ளும் வாய்ப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாக, பாலிவுட் வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. பூஷன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள ஆல் இஸ் வெல் படத்தில், அபிஷேக் பச்சன், அசின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹீரோ படத்தில் சல்மான் கான், சூரஜ் பஞ்சோலி, அதியா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆல் இஸ் வெல் மற்றும் ஹீரோ படங்கள், ஜூலை 3ம் தேதிக்கு ரிலீஸ் ஆவதாக இருந்தது. இந்நிலையில், ஆல் இஸ் வெல் படத்தின் தயாரிப்பாளர் பூஷன் குமார் கூறியதாவது, சல்மான் கான் எனது இனிய நண்பர். ஆல் இஸ் வெல் படத்திற்காக, இன்னும் சில காட்சிகள் எடுக்க வேண்டி இருப்பதால், படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் என்ற நிலை உருவாகியுள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்தாலும் கூட, ஜூலை 3ம் தேதிக்கு படத்தை வெளியிட மாட்டோம் என்று பூஷன் குமார் கூறியுள்ளார்.