ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்துக்கு அனிருத் இசையமைத்தார். அவரது முதல் படமும் அதுதான். அந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. ஆனால் அனிருத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின. ஒருவார காலம் அந்த படம் ஓடியதுகூட அனிருத்தின் பாடல்களுக்காகத்தான்.
ஆனபோதும், தனது இரண்டாவது படமான வை ராஜா வை படத்திற்கும் அனிருத்தை இசையமைக்க வைக்காமல் யுவன் ஷங்கர் ராஜாவை இசையமைக்க வைத்துள்ளார் ஐஸ்வர்யா தனுஷ். மேலும், இந்த படத்தை எப்படியேனும் ஓட வைத்து விட வேண்டும் என்பதற்காக கெளதம், ப்ரியாஆனந்த் நடித்துள்ள இப்படத்தில் தனுஷ், டாப்சியையும் கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்திருக்கிறார் ஐஸ்வர்யா.
அதோடு, டிசம்பர் மாதமே இப்படத்தின் ஆடியோவை வெளியிட்ட நிலையில், உடனடியாக படத்தை வெளியிடவும் திட்டமிடப்பட்டது. ஆனால், அந்த நேரத்தில் யுவன் ஷங்கர்ராஜா தனது 3வது திருமண வேலைகளில் ஈடுபட்டிருந்ததால், எதிர்பார்த்தபடி அவரால் பின்னணி இசையமைத்து கொடுக்க முடியவில்லையாம். அதனால்தான் சில மாதங்கள் தாமதமாகி விட்டதாம். தற்போது அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி விட்ட வைராஜா வை படத்தை ஏப்ரல் வெளியிட முடிவு செய்து விட்டார். உத்தமவில்லன், ஓ காதல் கண்மணி, வாலு, நண்பேன்டா உள்பட பல மெகா படங்கள் ஏப்ரலில் திரைக்கு வரத்தயார் நிலையில் இருந்தபோதும், அந்த படங்களோடு தனது படத்தை வெளியிட முடிவு செய்து விட்டதாகவும் கூறுகிறார் ஐஸ்வர்யா தனுஷ்.