ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பிரபல தொழிலதிபர் ஆர்.கே. தனது வியாபாரத்தில் சில நூறு கோடிகளை சம்பாதித்தவர் அதில் பெரும் தொகையை சினிமாவில் முதலீடு செய்தார். அதாவது விஜய் நடித்த சுறா, பாலா தயாரித்த பரதேசி உட்பட பல பெரிய படங்களுக்கு பைனான்ஸ் செய்தார். இன்னொரு பக்கம், திரைப்படங்களில் சின்னச்சின்ன வேடங்களில் தலையைக்காட்டி, வில்லனாக நடித்து மெல்ல கதாநாயகனாகவும் நடிக்க ஆரம்பித்தார்.
ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் நடித்த எல்லாம் அவன் செயல் படம் ஆர்கேவுக்கு ஓரளவு பெயர்வாங்கிக்கொடுத்தது. அதன் பிறகு அவர் ஹீரோவாக நடித்த அழகர்மலை படு தோல்வியடைந்தது. அதன் பிறகு பரதேசி, ஜில்லா படங்களில் நடித்தவர் தற்போது என் வழி தனி வழி என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அந்தப் படம் நாளை வெளியாகிறது. இப்படத்தைத்தொடர்ந்து வைகை எக்ஸ்பிரஸ் என்ற படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார். இதற்கிடையில் சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்க, சில தினங்களுக்கு முன் தொடங்கப்பட்ட புதிய படத்தில் வில்லனாக நடிக்கிறார் ஆர்.கே. அரசியல்வாதி வேடம் இவருக்கு. மற்றொரு வில்லனாக ஆனந்தராஜ் நடிக்கிறார்.