ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கன்னடத்தில் வெளியாகி வசூலை அள்ளிய படம் ஜெயம்மான மகா, அருந்ததி, காஞ்சனா மாதிரி பேண்டசி த்ரில்லர் படம். துனியா விஜய், பாரதி, கல்யாணி ராஜு, நடித்திருந்தனர். ரவிகிரண் விகாஸ் இயக்கி இருந்தார். அர்ஜுன் ஜென்யா இசை அமைத்திருந்தார். சுமார் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் முதல் வாரத்திலேயே 5 கோடி வசூலித்து சாதனை படைத்தது. சாட்டிலைட் உரிமம் மட்டும் 2 கோடிக்கு போனது. கன்னட சினிமாவில் இது ஒரு சாதனை அளவு.
தற்போது இந்தப் படத்தை ஆர்.எஸ். எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் எஸ்.அனிதா தமிழில் டப் செய்து வெளியிடுகிறார். படத்திற்கு ஓம் மகாசக்தி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். சசிகுமார் தமிழ் வசனங்களையும், பாடல்களையும் எழுதுகிறார். இந்த மாத இறுதியில் வெளிவருகிறது.