விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தொடங்கிய புதிய தயாரிப்பு நிறுவனம் | ஜெயிலர் 2வில் போலீஸ் வேடத்தில் பாலகிருஷ்ணா | கல்வி தான் ஏணிப்படி... எங்க குடும்பத்தின் முதல் பட்டதாரி ஆகப் போறான் : மகன் குறித்து முத்துகாளை உருக்கம் | தேசிங்குராஜா 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு | அம்மா, தங்கச்சி வேடங்களில் சுவாசிகா | ஒரு படத்துக்கு 5 இசையமைப்பாளர்கள் | மீண்டும் ஒரு ‛ஜென்ம நட்சத்திரம்' : 6 மணி 6 நிமிடம் 6 நொடியில் வெளியான தலைப்பு | தயாரிப்பாளர்களை கண்டித்து: பெப்சி ஒரு நாள் வேலை நிறுத்த அறிவிப்பு | 'மையல்' நாயகிக்கு அழகும், அம்சமும் இருக்கிறது : கே.எஸ்.ரவிகுமார், ஆர்.வி.உதயகுமார் பாராட்டு | தலைப்பு பிரச்னை : சந்தானம் படத்திற்கு தடை கேட்டு வழக்கு |
எம்ஜிஆர் நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான எங்க வீட்டுப் பிள்ளை படம் 50வது ஆண்டை நிறைவு செய்துள்ளது. இதையொட்டி கடந்த ஜனவரி 14ம் தேதி ஒரு கட்டுரை ஒன்று வௌியிட்டு இருந்தோம். இந்நிலையில் இப்படத்தின் 50வது ஆண்டை முன்னிட்டு ரசிகர்கள் இதை ஒரு விழாவாக எடுத்து கொண்டாட உள்ளனர்.
விஜயா கம்பைன்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சாணக்யா இயக்கத்தில், விஸ்வநாதன் ராம்மூர்த்தி இசையமைப்பில், எம்.ஜி.ஆர். இரண்டு வேடங்களில் நடித்த படம் எங்க வீட்டு பிள்ளை. சரோஜாதேவி, ரத்னா, எஸ்.வி.ரங்காராவ், நம்பியார், தங்கவேலு, நாகேஷ், பண்டரிபாய் உள்ளிட்ட பலரும் நடித்திருத்தனர். நாடோடி மன்னன் படத்திற்குப் பிறகு விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், எம்ஜிஆரும் மீண்டும் இணைந்த படம் இது.
எம்ஜிஆர் நடித்த இரு வேடப் படங்களிலேயே இந்தப் படம் மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய படம் இது. இந்தப் படத்திற்கு முன் எம்ஜிஆர் முதன் முதலாக இரு வேடங்களில் நடித்து வெளிவந்த படம் நாடோடி மன்னன். இந்தப் படம் வெளிவந்து 7 ஆண்டுகளுக்குப் பிறகுதான் எம்ஜிஆர் அடுத்து இரு வேடங்களில் நடித்த எங்க வீட்டுப் பிள்ளை படம் வெளிவந்தது. தெலுங்கில் என்.டி.ராமராவ் நடித்து வெளிவந்து வெற்றி பெற்ற ராமுடு பீமுடு படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி இந்தப் படத்தைத் தயாரித்தனர்.
எம்.ஜி.ஆர்., ராமு, இளங்கோ என்ற இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். தாய்மாமனின் கொடுமை தாங்க முடியாமல் வீட்டைவிட்டு ஓடுகிறார் கோழையான ஒரு எம்.ஜி.ஆர்., அந்த இடத்திற்கு தைரியமான இன்னொரு எம்.ஜி.ஆர்., வருகிறார். அதன்பின்னர் என்ன நடக்கிறது என்பது தான் கதை.
இந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல்களான, “கண்களும் காவடிச் சிந்தாகட்டும்..., குமரிப் பெண்ணின் உள்ளத்திலே..., மலருக்குத் தென்றல் பகையானால்..., நான் ஆணையிட்டால்..., நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்..., பெண் போனாள்...” என அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட்டாக அமைந்து இன்று வரை ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. 1965-ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி வௌியான இப்படம், பல திரையரங்குகளில் 100 நாட்களையும், சில திரையரங்குகளில் 200க்கும் மேற்பட்ட நாட்களும் ஓடி சாதனை படைத்தது.
இப்படம் வௌிவந்து 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை முன்னிட்டு எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் இதை விழாவாக எடுத்து கொண்டாட உள்ளனர். வருகிற மார்ச் 15ம் தேதி, தி.நகரில் உள்ள சர்.டி.பி தியாகராயர் அரங்கில் இந்த விழா நடக்கிறது. இதில் எங்கவீட்டு பிள்ளை படத்தில் நடித்த சரோஜா தேவி, ரத்னா, பின்னணி பாடிய பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி உள்ளிட்டவர்களும் பங்கேற்க இருக்கின்றனர். இவர்களுடன் சேர்ந்து அந்தக்கால திரைபிரபலங்களான சச்சு, ராஜஸ்ரீ, சிஐடி., சகுந்தலா உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர்.