ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமூக வலைத்தளங்களை அதிகமாகப் பயன்படுத்துவதில் அஜித் ரசிகர்களை மிஞ்ச ஆளே இல்லை என பல முறை அவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். அஜித்தின் படங்கள் வெளிவரும் போதும், டிரைலர் வெளியாகும் போதும், டீசர் வெளியாகும் போதும், இசை வெளியாகும் போதும் அஜித் சம்பந்தப்பட்ட தகவல்களை, செய்திகளை சமூக வலைத்தளங்களில் மிக அதிக அளவில் பரப்புரை செய்வார்கள்.
சில மாதங்களுக்கு முன் 'என்னை அறிந்தால்' படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை வெளிவந்த போது டிவிட்டரில் இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் டிரெண்டிங் செய்தனர். யு டியூபிலும அவற்றிற்கு அதிக லைக்குகள் கொடுத்து இந்திய அளவில் மிகப் பெரிய சாதனையை படைத்தனர்.
நேற்று அஜித்திற்கு மகன் பிறந்ததையடுத்து 'குட்டி தல' என ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி அதை இந்திய அளவிலும், உலக அளவிலும் டிரெண்டிங்கில் கொண்டு வந்தனர். இந்திய அளவில் நேற்று 12 மணி நேரம் 'குட்டி தல' வார்த்தைதான் இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்தது. இப்போதும் டாப் 10 பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
அஜித்திற்கு மகன் பிறந்ததையடுத்து அவரது ரசிகர்களும் பல பிரபலங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.