ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள சினிமாவில் வித்தியாசமான நடிப்பால் கலக்கிவரும் பஹத் பாசில் அடுத்ததாக நடித்துவரும் படத்தின் பெயர் 'ஆயாள் ஞானல்ல', இதுவரை தனது ஒரிஜினல் ஹேர்ஸ்டைலுடன்(!) நடித்துவந்த பஹத் பாசில் இந்தப்படத்தில் வித்தியாசமான ஹேர்ஸ்டைலுக்காக முதன்முறையாக விக் வைத்து நடிக்கிறார். பிரபல மலையாள இயக்குனர் ரஞ்சித் இந்தப்படத்தின் கதையை எழுத, நடிகராக இருந்த வினீத்குமார் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக மாறுகிறார். இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிப்பவர் மிருதுளா முரளி.. மோகன்லாலின் 'ரெட் சில்லீஸ்' படத்தில் அறிமுகமான இவர் தமிழில் மனிவண்ணன் இயக்கிய 'நாகராஜசோழன்' படத்திலும் நடித்துள்ளார். தற்போது 'ஆயாள் நானல்ல' படத்தில் பஹத் பாசிலின் பெண்டாஸ்டிக் நடிப்பை பார்த்து, அவரிடமிருந்து நடிப்பதற்காக பல டிப்ஸ்களை உள்வாங்கிக்கொண்டாராம் மிருதுளா. படத்தில் குஜராத்தில் பிறந்து கேரளாவில் வந்து செட்டில் ஆன பெண்ணாக நடிக்கிறார் மிருதுளா. இதன் படப்பிடிப்புக்காக சில நாட்கள் குஜராத்தில் முகாமிட்ட மிருதுளா, அந்த ஊரின் டேஸ்ட்டான உணவுகளையும் ஒருபிடி பிடித்துவிட்டுத்தான் வந்திருக்கிறாராம்.