ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய ஐ படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் 150 கோடி ரூபாய் செலவில் தயாரித்தார். நீண்ட நாள் தயாரிப்பு, நீண்ட போராட்டம், பல்வேறு பிரச்சினைகள் அனைத்தையும் தாண்டி கடந்த பொங்கல் அன்று (ஜன 14) ஐ வெளிவந்தது.
ஷங்கரின் பிரமாண்டம், விக்ரமின் உழைப்பு, எமி ஜாக்சனின் அழகு, ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனின் தைரியம் அனைத்தையும் ஐ உறுதி செய்தது. மக்கள் இவர்களுக்கு வெற்றியை பரிசளித்தார்கள். படத்தின் விமர்சனங்கள் பல்வேறு கோணங்களில் வந்திருந்தாலும். மக்களின் ஆதரவு அமோகமாக இருந்தது. தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் ஆகியோருக்கு லாபத்தைக் கொடுத்தது.