ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அனுஷ்கா நடிப்பில் 100 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு வரும் படம் ருத்ரமாதேவி. இது 13ம் நூற்றாண்டில் ஆந்திராவை ஆண்ட ராணி ருத்ரமாதேவியின் கதை. அனுஷ்கா ருத்ரமாதேவியாக நடிக்கிறார். அவருடன் அல்லு அர்ஜுன், ராணா, பிரகாஷ்ராஜ், விஜயகுமார், கேத்ரின் தெரசா, ஹம்சா நந்தினி, அதிதி செங்கப்பா நடிக்கிறார்கள். ஹாலிவுட் சரித்திர படங்களின் ஸ்டைலில் தயாரிக்கப்படும் பிரமாண்ட படம். இது 3டி தொழில்நுட்பத்திலும் தயாராகிக் கொண்டிருக்கிறது.
இது அனுஷ்காவின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படம். பெரிய பட்ஜெட், பிரபல நட்சத்திரங்கள், பிரமாண்ட காட்சி அமைப்புகள் கொண்டது. இதன் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வாங்கி உள்ளது. தற்போது தமிழில் டப் செய்யும் பணிகள் தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் 400 தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள். 3டி தொழில்நுட்பத்திலும் வெளிவருகிறது. அனுஷ்கா நடித்த அருந்ததி படத்தையும் தேனாண்டாள் பிலிம்ஸ் வாங்கி வெளியிட்டு பெரிய அளவில் வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.