ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'புலி' என்று படத்திற்கு பெயர் வைத்தாலும் வைத்தார்கள் படத்தைப் பற்றிய பல வதந்திகள் புலிப் பாய்ச்சலை விட வேகமாகப் பரவுகின்றன. முதலில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்றார்கள், பின்னர் அதில் ஒரு கதாபாத்திரத்தில் குள்ளமான மனிதராக நடிக்கிறார் என்றார்கள், அதன் பின் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்றார்கள். ஆனால், விஜய் அப்படியெல்லாம் நடிக்கவில்லை என்றும் பின்னாடியே வேறு ஒரு செய்தியும் வருகிறது. அதற்கடுத்து படத்தில் ராணியாக நடிக்கும் ஸ்ரீதேவிக்கும் ராஜாவாக நடிக்கும் சுதீப்புக்கும் இடையே முத்தக் காட்சி ஒன்று படத்தில் இருக்கிறதாம். அதற்காகத்தான் ஸ்ரீதேவி கூட சம்பளமாக ஐந்து கோடி ரூபாய் கேட்டார்கள் என்றும் செய்திகள் பரவின.
தற்போது அப்படியெல்லாம் எந்த ஒரு முத்தக் காட்சியும் இல்லை என சுதீப்பே தெரிவித்துவிட்டாராம். அதோடு, எங்கிருந்துதான் இப்படியெல்லாம் செய்திகள் பரவுகின்றன என்றும் அவர் ஆச்சரியத்துடன் கேட்டார் என சாண்டல்வுட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும், படத்தில் விஜய் மற்றும் ஹன்சிகா, விஜய் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோரிடையே முத்தக் காட்சி இருக்கிறதா இல்லையா என்பதுதான் அடுத்த கேள்வியாக கண்டிப்பாக எழப் போகிறது.
ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் என இரண்டு இளம் ஹீரோயின்கள் இருக்கும் போது அவர்களுக்கு முத்தக் காட்சி வைக்காமல், முன்னாள் நாயகியாக ஸ்ரீதேவிக்கு யாராவது முத்தக் காட்சி வைப்பார்களா, இதைக் கூடவா யோசிக்க மாட்டார்கள் என நம்மையே திருப்பிக் கேட்கிறார் கோலிவுட்டில் அனுபவம் வாய்ந்த ஒருவர். சீக்கிரமே படத்தைப் பத்தி எதையாவது வெளியில் சொன்னால் நன்றாக இருக்கும். இல்லையென்றால் படத்தில் ஒரு புலிக்கு விஜய் முத்தம் கொடுக்கும் காட்சி ஒன்று இருக்கிறது என எழுதிவிடப் போகிறார்கள்.