Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கிரிக்கெட்டால் பாதிக்கப்படும் வசூல்...?

24 பிப், 2015 - 10:21 IST
எழுத்தின் அளவு:
Due-to-worldcup-cricket-movie-collections-suffer

உலகக் கோப்பை கிரிக்கெட் மேட்ச் மும்முரமாக நடந்து வருவதால் கடந்த இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளிலும் திரைப்படங்களுக்கான வசூல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஞாயிறு இந்திய - தென்னாப்பிரிக்கா, அதற்கு முந்தைய ஞாயிறு இந்திய - பாகிஸ்தான் போட்டிகள் நடைபெற்றன. இரண்டுமே முக்கியமான ஆட்டங்கள் என்பதால் திரையரங்குகளில் கூட்டமே இல்லையாம். சில ஊர்களில் காட்சிகளை ரத்து செய்யுமளவிற்குக் கூட நிலைமை இருந்ததாகத் தெரிவிக்கிறார்கள்.


பெரிய படங்களாகவாவது இருந்தால் பரவாயில்லை, அவர்களின் ரசிகர்கள் எப்படியும் படம் பார்க்க வந்துவிடுவார்கள். இந்த மாதம் பல சிறிய படங்கள் வெளிவந்திருப்பதால் அவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்கிறார்கள். தற்போது லீக் சுற்று போட்டிகளில் நடந்து வருகின்றன. அடுத்தமாதம் காலிறுதி மற்றும் அரையிறுதி போட்டிகள் நடைபெற இருக்கிறது. மேலும் இந்திய அணியும் சிறப்பாக செயல்பட்டு வருவதால், அடுத்த மாதம் வெளிவரும் படங்களுக்கும் பாதிப்பாக அமையலாம் என்கிறார்கள். இந்திய அணிக்கு அடுத்து, பிப்ரவரி 28, மார்ச் 6, 10, 14 ஆகிய தேதிகள் போட்டிகளில் உள்ளன. காலிறுதிப் போட்டிகள் மார்ச் 18, 19, 20, 21 ஆகிய தேதிகளிலும், அரை இறுதிப் போட்டிகள் மார்ச் 24, 26 ஆகிய தேதிகளிலும், இறுதிப் போட்டி மார்ச் 29ம் தேதியும் நடக்க உள்ளன.


இந்திய அணி ஒரு வேளை ஒவ்வொரு கட்டமாக கடக்கும் போது மார்ச் மாதம் வெளிவரும் படங்களின் வசூலும் மிகப் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ளது. மார்ச் மாதம் “எனக்குள் ஒருவன், சேர்ந்து போலாமா, ரொம்ப நல்லவன்டா நீ, வானவில் வாழ்க்கை, இடம் பொருள் ஏவல், கொம்பன், வாலு” ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. இவற்றைத் தவிர மேலும் சில படங்கள் வெளி வரவும் வாய்ப்புள்ளது.


இப்போதெல்லாம் ஒரு படத்தைத் தயாரிப்பது கூட பெரிய விஷயமல்ல, அதை சரியான நேரத்தில் வெளியிடுவதுதான் பெரிய விஷயமாக உள்ளது. கிரிக்கெட்டி போட்டிகள் ஒரு பக்கம், பரீட்சைகள் மறுபக்கம் என வெளிவரும் படங்களுக்கும் ஒரு சோதனையான காலம் இது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in