சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
ஒரு ஹீரோவின் பிறந்தநாளில் அவர் நடித்த படம் ரிலீஸ் ஆவது பெரிய விஷயமில்லை. ரஜினி நடித்த லிங்கா படம் அவரது பிறந்ததினமான டிசம்பர் 12 அன்று வெளியானது. புலி படத்தைக் கூட தன்னுடைய பிறந்தநாளில் வெளியிட வேண்டும் என்று விஜய் திட்டமிட்டிருக்கிறாராம். ஆனால் ஒரு ஹீரோ நடித்த படத்தை இன்னொரு ஹீரோவின் பிறந்தநாளில் ரிலீஸ் செய்வது வியப்பான விஷயம். வெங்கட் பிரபு இயக்கத்தில், சூர்யா நடித்து வரும் 'மாஸ்' படத்தை அஜித்தின் பிறந்தநாளான மே 1-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
அஜித்தை வைத்து 'மங்காத்தா' எனும் சூப்பர் ஹிட் படத்தை இயக்கினார் வெங்கட் பிரபு. அப்போது அஜித்திடம் நெருங்கிப்பழகியவர் அஜித்துக்கு ரசிகராகவே மாறினார். அந்த அபிமானம் காரணமாக தற்போது சூர்யாவை வைத்து இயக்கம் 'மாஸ்' படத்தை அஜித்தின் பிறந்த நாளான மே 1-ஆம் தேதி ரிலீஸ் செய்ய வேண்டும் என்று தீர்மானித்து முழுமூச்சாக வேலை செய்து வருகிறார். வெங்கட்பிரபுவின் இந்த செயல் சூர்யா ரசிகர்களை சந்தோஷப்படுத்துகிறதோ இல்லையோ... அஜித் ரசிகர்களிடையெ பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை!