Advertisement

சிறப்புச்செய்திகள்

விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

22 வயது இளைஞர் தயாரிக்கும் அவளுக்கென்ன அழகிய முகம் .

22 பிப், 2015 - 17:03 IST
எழுத்தின் அளவு:
Avalukenna-azhagiya-mugam-movie-produced-by-youth

சினிமா பல இளைஞர்களை ஈர்த்து வருகிறது. எம்.எஸ். கதிரவன் என்கிற பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் 22 வயதில் தயாரிப்பாளராகி இருக்கிறார். அவர் தயாரிக்கும் படம் அவளுக்கென்ன அழகிய முகம் .


இப் படத்தை இயக்குபவர் ஏ.கேசவன்.இது இவரது முதல் படம். காதலில் வெவ்வேறு காரணங்களால் தோல்வி அடைந்த மூன்று பேர் தங்களுடன் வந்து சேர்ந்த நான்காவது நண்பனின் காதலை எப்படி வெற்றி பெற வைக்கிறார்கள் என்பதுதான் கதை.


இது காதலும் நகைச்சுவையும் கலந்த கலகலப்பான படம்.


நடிப்பவர்கள் பலரும் புதியவர்கள். பூவரசன், விஜய்கார்த்திக், விக்கிஆதித்யா, சபரி என நான்குபேர் நாயகர்களாக அறிமுகமாகிறார்கள். பிரதான நாயகியாக டெல்லி விளம்பர மாடல் அனுபமா பிரகாஷ் அறிமுகமாக ரூபாஸ்ரீ. சத்யா, நிவிஷா என மேலும் மூன்று புதுமுகங்களும் நடிக்கிறார்கள்.


கதைக்களம் கோவை என்றாலும் மதுரைக்குக் கதை பயணிக்கிறது.


கோவை,மதுரை தவிர கொடைக்கானல், சென்னை, பாண்டிச்சேரி, கேரளா ஆலப்புழா போன்ற இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.


படத்தில் 5 பாடல்கள். எல்லாவற்றையும் வைரமுத்து எழுதியுள்ளார். ஐந்தும் வெவ்வேறு நிறம் வெவ்வேறு தளம் என்று சொல்லும்படி இருக்கும். நட்பு, காதல்,பயணம், தோல்வி, தாய்ப்பாசம் இப்படி பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கருத்தைப்பேசும்.


படத்துக்கு ஒளிப்பதிவு நவநீதன். இசை டேவிட் ஷார்ன். இவர் மலையாளம், இந்தியில் ஆல்பங்கள் இசையமைத்தவர். படத்தொகுப்பு. கோபிகிருஷ்ணா, நடனம்: ஷங்கர், ஸ்டண்ட்: எஸ்.ஆர்.முகேஷ், கலை இயக்கம்: எட்வர்ட் கென்னடி.


தயாரிப்பு மேற்பார்வை: அன்பு செல்வன், கதிரவன் ஸ்டுடியோஸ் சார்பில் எம்.எஸ். கதிரவன் தயாரிக்கும் அவளுக்கென்ன அழகிய முகம் இறுதிக்கட்டப் பணிகளில் மும்முரமாக உருவாகி வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in