ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கருணாஸ், தற்போது தான் நடித்து வரும் படங்களில் மிகவும் கவனமாக தன்னுடைய பாத்திரங்களை தேர்வு செய்கிறார். சமீபத்தில் திரைக்கு வந்த டார்லிங் படம் பேசப்பட்டது. அடுத்து திரைக்கு வர உள்ள படம் லொடுக்கு பாண்டி. இதில் நகைச்சுவை கலந்த நாயகனாக நடித்திருக்கிறார் கருணாஸ். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் நேகா சக்சேனா. இவருக்கு படபிடிப்பின் போது நடிப்பு பற்றி பாடம் எடுப்பதுடன் இண்டஸ்ரியில் உள்ள நெளிவு, சுழிவுகளையும் சொல்லி கொடுத்தருக்கிறார் கருணாஸ். இதனால், கருணாஸ் மீது மரியாதை அதிகமாக உண்டாகி விட்டதாம். இதை வெளிப்படுத்தும் விதமாக ஏதாவது கருணாஸ்க்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்தார். இதை வெளிப்படுத்தும் விதமாக கருணாஸ் பிறந்தநாள் இன்று வந்திருக்கிறது. அப்போது நேகா சக்சேனா பளபளப்புடன் பாய்ந்து செல்லும் கண்ணாடி குதிரை ஒன்றை அன்பளிப்பாக கொடுத்துள்ளராம் நேகா. இதற்கான அர்த்தத்தை கேட்டபோது காரணம் எதுவும் இல்லை பார்ப்பதற்கு அழகாக இருந்தது, வாங்கினேன் பாஸ் என்றாராம்.