ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை தேவயானியின் தம்பி நகுலன். ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் குண்டு பையனாக அறிமுகமான நகுலன், 6 வருடம் கடும் பயிற்சி செய்து 110 கிலோ எடையை 70 கிலோவாக குறைத்து பெயரையும் நகுல் என்று சுருக்கி, ''காதலில் விழுந்தேன்'' படத்தில் ரீ-என்ட்ரி ஆனார். அதன் பிறகு கந்தகோட்டை, மாசிலாமணி, வல்லினம், நான் ராஜாவாக போகிறேன் படங்களில் நடித்தார். அமளி துமளி, நாரதன் படங்களில் நடித்து வருகிறார். நகுல் நடித்துள்ள தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படம் நாளை (ஜன 20) ரிலீசாகிறது. இதற்கிடையில் நகுல் தான் காதலித்து வரும் பெண்ணை மணக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: திருமண வயது ஆகிவிட்டது என்பதை மறுக்கவில்லை. வீட்டில் நிறைய பெண் பார்த்தார்கள். அப்போதுதான் நான் ஒருவரை காதலிக்கும் விஷயத்தை அவர்களிடம் சொல்லி ஓகே வாங்கினேன். நான் காதலிப்பவர் வெளிநாட்டில் சமையல்கலையில் உயர்படிப்பு படித்தவர். நாங்கள் நான்கு வருடங்களாக காதலித்து வருகிறோம். எங்கள் காதலுக்கு இரு வீட்டிலும் பச்சைக்கொடி காட்டி விட்டார்கள். திருமணம் வரைக்கும் என்னை தெரியப்படுத்தக்கூடாது என்பது காதலியின் அன்பு கட்டளை. எனவே திருமணத்தின்போது அவரை அறிமுகப்படுத்துகிறேன். அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரியில் திருமணம் நடக்கும்.
என்னை பற்றி நிறைய நடிகைகளுடன் கிசுகிசு வந்துவிட்டது. இனி வராது என்று நம்புகிறேன். தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படம் நம்பிக்கை தருகிறது. உதயநிதி ஸ்டாலின் சார் படத்தை வாங்கியதே எங்களுக்கு பாதி வெற்றி கிடைத்த மாதிரி. மீதி வெற்றியை மக்கள் தருவார்கள். அடுத்து நாரதன் படம் வெளிவருகிறது. இதில் முற்றிலும் வித்தியாசமான நகுலை பார்க்கலாம். அடுத்து அமளி துமளி வரும். இன்னும் சில புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறேன். அதுபற்றிய அறிவிப்புகள் விரைவில் வரும்.