சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
தற்போது தமிழில் வளர்ந்து கொண்டிருக்கும் நடிகைகளில் ஸ்ரீதிவ்யா குறிப்பிடத்தக்கவர். ஆந்திர நடிகையான இவருக்கு அங்கும் ஓரளவு மார்க்கெட் இருப்பதால், அவர் நடிக்கும் படங்களை தெலுங்கிலும் வெளியிடலாம் என்று கணக்குப் போட்டே அவரை ஒப்பந்தம் செய்கிறார்கள் தயாரிப்பாளர்கள். அதனால் அதை பயன்படுத்தி படத்துக்குப்படம் தனது படக்கூலியை அதிரடியாக உயர்த்திக்கொண்டே வரும் ஸ்ரீதிவ்யாவுக்கு, இப்போது முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை மேலோங்கியிருக்கிறது. அதனால், இப்போது கதையை கேட்பதற்கு முன்பே ஹீரோ யார் என்பதுதான் அவரது முதல் கேள்வியாக உள்ளது.
அந்த வகையில், பெங்களூர் டேஸ் படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிக்கயிருந்த சமந்தா விலகியபோது, அடுத்த சாய்சாக ஸ்ரீதிவ்யாவைதான் அணுகினர். இதனால் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிக்கப்போகிறோம் என்று அந்த படத்தில் ஓடோடிச்சென்று ஒப்பந்தமானார் ஸ்ரீதிவ்யா.
ஆனால் இப்போது அவருக்கு அதிர்ச்சிதரும் வகையில், அந்த படத்தில் சித்தார்த்தும் இல்லை என்று கூறிவிட்டார்களாம். அதோடு, வளர்ந்து வரும் ஹீரோ ஒருவர்தான் சித்தார்த் வேடத்தில் நடிப்பார்கள் என்று அவர்கள் கூறியதை அடுத்து, சித்தார்த்துடன் டூயட் பாட வேண்டும் என்ற எனது ஆசை இப்படி கடைசி நேரத்தில் கைநழுவிப் போய் விட்டதே என்று புலம்பிக்கொண்டிருக்கிறார் ஸ்ரீதிவ்யா.