யோகிபாபு மீது தவறு இல்லை: பல்டி அடித்த இயக்குனர் | வயது 42 ஆனாலும், திரையுலகில் 22 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம்வரும் த்ரிஷா | 25வது நாளில் 'குட் பேட் அக்லி' | தலைவனாக விஜய் சேதுபதி, தலைவியாக நித்யா மேனன்! | தீபாவளிக்கு வெளியாகும் பைசன்! | 'தொடரும்' படம் தமிழ் பதிப்பு ரிலீஸ் தேதி அறிவிப்பு! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் புதிய அப்டேட்! | சூர்யா 46வது படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடியா? | கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - வெள்ளிவிழா ஆண்டில் ரீரிலீஸ் அறிவிப்பு | பிளாஷ்பேக்: இயக்குநர் பி ஆர் பந்துலுவின் 'டூப்'பாக சாண்டோ சின்னப்ப தேவர் நடித்த “திலோத்தமா” |
அஜீத் நடித்து வெளியான என்னை அறிந்தால் படம் ஜனவரி கடைசியில் வெளியாக இருந்தது. பின்னர் தியேட்டர் பிரச்சினை காரணமாக பிப்ரவரிக்கு மாற்றினர். அதனால் அந்த நேரத்தில் வெளியாக இருந்த சில படங்கள் ரிலீஸ் தேதிகளை மாற்றிக்கொண்டு பின்வாங்கின.
ஆனால், அஜீத் படம் ரிலீசான அடுத்த வாரத்திலேயே தனுஷின் அனேகன் களமிறங்கியது. அஜீத் படம் வெளியாகி ஒரு வாரமாகி விட்டதால் நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றுதான் அவர்கள் நினைத்தனர். ஆனால், என்னை அறிந்தால் இன்னமும் ஓடிக்கொண்டிருப்பதால், அந்த படத்தை திரையிட்டிருக்கும் எந்த தியேட்டரையும் அனேகனுக்கு கொடுக்க தியேட்டர்காரர்கள் தயாராக இல்லையாம்.
அதனால், தங்கள் படம் வெளியானதும் என்னை அறிந்தால் திரையிட்டிருக்கும் நிறைய தியேட்டர்கள் காலியாகி நம் பக்கம் திரும்பி விடும் என்று எதிர்பார்த்த ஏஜிஎஸ் நிறுவனத்தின் கணக்கு தவறாகி விட்டதாம். இப்போது வெறும் 207 தியேட்டர்களில் மட்டுமே(தமிழகத்தில்) அனேகனை திரையிட்டிருக்கும் அவர்கள் தியேட்டர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த முடியாமல் தவித்து வருகிறார்கள். இதனால் அவர்கள் எதிர்பார்த்த வசூல்கூட இன்னும் கைசேரவில்லையாம். இதற்கிடையே, வருகிற வெள்ளிக்கிழமை அன்று மேலும் சில படங்களும் வெளியாக இருப்பதால், அனேகன் வட்டாரம் கடும் அதிர்ச்சியில் உள்ளது.