திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
இயக்குனர் ஆனைவாரி ஸ்ரீதரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருபவர் தமிழ். இவர் டோனா என்ற பெயரில் இயக்கியுள்ள 6 நிமிட குறும் படம் பிரான்ஸ் சார்ட் பிலிம் கார்னரில் செலக்ட் ஆகியுள்ளது. உலக அளவில் 3 ஆயிரம் குறும் படங்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில், 300 படங்கள் செலக்ட் ஆகியுள்ளன. அதில் இந்தியாவில் இருந்து சென்ற குறும் படங்களில் தேர்வான 5 படங்களில் இந்த டோனாவும் ஒன்று.
இதுபற்றி அப்பட டைரக்டர் தமிழ் கூறும்போது, இந்த டோனா குறும் படத்தை ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையே உள்ள ஈகோவை மையப்படுத்தி உருவாக்கினேன். அந்த பெண் நினைப்பதை பையன் செய்ய மாட்டான். பையன் நினைப்பதை பெண் செய்ய மாட்டாள். ஒரு கட்டத்தில் பையன் இறங்கி வருவான். ஆனால் அந்த பெண் இறங்கி வர மாட்டாள். இதுதான் அந்த 6 நிமிட கதையில் சொல்லப்பட்டுள்ளது.