ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும், காதலுடன், திருமதி தமிழ் ஆகிய படங்களை இயக்கியவர் ராஜகுமாரன். இதில் திருமதி தமிழ் படத்தில் கதாநாயகனாகவும் நடித்தார். அதோடு ஓடாத அந்த படத்தை 100 நாட்கள் ஓடியதாகவும் விளம்பரம் செய்து கொண்டார். அதையடுத்து, படம் இயக்கும் வாய்ப்புகள் அமையாததால், நடிப்பில் கவனத்தை திருப்பினார். அந்த நேரத்தில் பவர்ஸ்டாருக்கு பதிலாக ஒரு நடிகர் வேண்டும் என்று நினைத்த சந்தானம், தான் நாயகனாக நடித்த வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் படத்தில் பவர்ஸ்டார் நடிக்க வேண்டிய ஒரு காமெடி வேடத்தில் ராஜகுமாரனை நடிக்க வைத்தார். அதோடு, பில்டப் கொடுத்து அவரது கேரக்டரை ஓப்பன் செய்தார். அந்த ரோலில் கிட்டத்தட்ட இன்னொரு பவர்ஸ்டார் போலவே நடித்திருந்தார் ராஜகுமாரன். அதனால் அதன்பிறகு தனக்கு நிறைய காமெடி வேடங்கள் வரும் என்று எதிர்பார்த்த அவருக்கு யாரும் சான்ஸ் கொடுக்கவில்லை.
இந்தநிலையில், தனது மனைவி தேவயானியை படங்களுக்கு புக் பண்ண வருபவர்களிடம், தனக்கு தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாக சொல்லி வரும் அவர், எந்த மாதிரியான கேரக்டர்கள் என்றாலும் நடிக்க நான் தயாராக இருக்கிறேன. முக்கியமாக பவர்ஸ்டார் போன்று காமெடி வேடங்களில் வெளுத்துக்கட்ட தயாராக இருக்கிறேன். அதனால் காமெடி வேடங்கள் இருந்தால் எனக்கு கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டு வருகிறார்.