ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தற்போது திரைக்கு வந்திருக்கும் தனுஷின் அனேகன் படத்திற்கு ஒரு நல்ல ஓப்பனிங் கிடைத்தது என்றால் அதற்கு அந்த படத்தில் இடம்பெற்ற டங்காமாரி ஊதாரி -என்ற கானா பாடலும் ஒரு முக்கிய காரணமாகும். இந்த பாடலை யு-டியூப்பில் வெளியிட்டதில் இருந்தே இளவட்ட ரசிகர்கள் அதறகு லைக் கொடுத்து வந்தனர். அந்த வகையில், விஜய்யின் கத்தி பாடல்களுக்கு அடுத்த இடத்தில் இந்த பாடல் இடம்பெற்றிருந்தது.
அதேபோல், இப்போது அந்த படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் அந்த டங்காமாரி பாடல் வந்ததும் எழுந்து செம குத்தாட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதனால் அந்த பாடலை தனுசுடன் இணைந்து பாடிய மரண கானா விஜிக்கு கோலிவுட்டில் மவுசு கூடியிருக்கிறது.
ஆனால், இப்படி ஹிட்டாகியுள்ள அந்த பாடலை மரணகானா விஜியை வைத்து பாட வைப்பதற்கு ரொம்ப கஷ்டப்பட்டாராம் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். காரணம், விஜி நல்ல பாடகர் என்றபோதும், சரியாக ஸ்ருதியை பிடித்து பாட மாட்டாராம். முதல் வரியை ஒரு ஸ்ருதியில் பாடினால், அதற்கடுத்த வரியை இன்னொரு ஸ்ருதியில் பாடுவாராம். இதனால் அந்த பாடலில் அவர் பாடிய வரிகளை மட்டும் பாட வைக்க 8 மணி நேரம் பிடித்ததாம். இதனால் அவரை பாட வைப்பதற்குள் ரொம்பவே டென்சனாகி விட்டாராம் ஹாரிஸ்.