ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாளத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான தட்டத்தின் மறையத்து படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார்கள். யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்குகிறார். புதுமுகம் கவுதம் ஹீரோவாக அறிமுகமாகிறார். தட்டத்தின் மறையத்து படத்தில் நடித்த இஷா தல்வார் இதிலும் அதே கேரக்டரில் நடிக்கிறார். தில்லுமுல்லு படத்துக்கு பிறகு இஷா நடிக்கும் படம் இது. இவர்கள் தவிர நாசர், மனோஜ் கே.ஜெயன், தலைவாசல் வவிஜய், சிங்கமுத்து, சிங்கம்புலி, வனிதா நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார், விஷ்ணு சர்மா ஒளிப்பதிவு செய்கிறார்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இந்து பையனும், பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண்ணும் காதலிக்கிற கதைதான் என்றாலும் அதனை கவிதையாக அழகாக சொல்கிற படம். கதை களம் கன்னியாகுமரி. சத்தமே இல்லாமல் பெரும்பகுதி படத்தை எடுத்து முடித்து விட்டார்கள். தற்போது படத்தை தயாரிக்கும் பிளாக் டிக்கெட் பிலிம்ஸ் நிறுவனத்திடமிருந்து கலைப்புலி எஸ்.தாணு வாங்கியிருக்கிறார். தனது வி கிரியேஷன் மூலம் அதனை வெளியிடுகிறார்.