ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பொதுவாக வடக்கத்திய நடிகைகளை தமிழுக்கு இறக்குமதி செய்யும் டைரக்டர்கள், அவர்கள் வெறும் கவர்ச்சிக்காக மட்டும்தான் பயன்படுத்துவார்கள். ஆனால், அனேகன் படத்திற்காக மும்பையிலிருந்து இறக்குமதி செய்த அமைராவை மூன்று விதமான கெட்டப்புகளில் நடிக்க வைத்து அவரது திறமையை முதல் படத்திலேயே வெளிப்படுத்தி விட்டார் கே.வி.ஆனந்த். அதனால் அனேகன் படம் பார்த்த பல கோலிவுட் நடிகர்கள் தனுசுக்கு இணையாக அமைராவும் மூன்று விதமான கெட்டப்புகளில் சிறப்பாக நடித்திருப்பதாக அவரை பாராட்டி வருகிறார்கள். அதனால், செம உற்சாகத்தில் இருக்கும் அமைரா, தொடர்ந்து தமிழில் இதுபோன்ற வெயிட்டான கதாபாத்திரங்களில் நடிக்க தான் ஆர்வமாக உள்ளதாக கூறி வருகிறார். மேலும், நான் இப்படி நீங்கள் பாராட்டும் அளவுக்கு நடிப்பதற்கு முக்கிய காரணம் கே.வி.ஆனந்தும், தனுசும்தான். சுத்தமாக தமிழே தெரியாத எனக்கு தமிழை புரிய வைத்து, நடிக்க வைப்பதற்கு ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறார்கள். அதோடு, எனது கோ ஆர்ட்டிஸ்டான தனுஷ், எனக்கு அவ்வப்போது எப்படி எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தார். அதனால்தான் என் நடிப்பு பாராட்டு பெற்றுள்ளது என்கிறார் அமைரா.