ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
காதலர் தினத்தன்று வித விதமான வாழ்த்துகளை நமது நட்சத்திரங்கள் தெரிவித்தார்கள். அவற்றில் வித்தியாசமாகப்பட்டது நடிகை சார்மியின் வாழ்த்துதான் அவற்றில் வித்தியாசமாகத் தெரிந்தது. முதலில் நம்மை நாமே காதலிக்க வேண்டும் என காதலர் தின வாழ்த்தாக அவர் கூறியுள்ளார்.
“நான் 26 வயதே ஆன நியாயமான அழகுடைய கெட்ட குணம் இல்லாத கல்யாணமாகாத இளம் பெண். எதிர்பார்ப்புகள் எப்போதுமே ஏமாற்றத்தைத் தரும். அதனால் எதற்காக மற்றவர்களுக்காகக் காத்திருக்க வேண்டும். அதனால் எனக்கு நானே பரிசு கொடுக்க முடிவெடுத்தேன். என்னை விட வேறு யார் என்னை அதிகம் காதலிக்கப் போகிறார்கள். எனக்காக சில சிகப்பு ரோஜாக்களை வாங்கினேன், என்னைப் பற்றி நானே எனக்கு ஒரு கடிதம் எழுதிக் கொண்டேன். ”உன்னை நான் மிகவும் காதலிக்கிறேன், எப்போதுமே நான் உன்னுடன் இருப்பேன்,” என எனக்காகவே எழுதினேன். அதுதான் உண்மையும் கூட. தனியாகப் பிறக்கிறோம், தனியாக இறக்கிறோம், தனியாகவே வாழக் கற்றுக் கொள்வோம். உங்களை முதலில் காதலியுங்கள்...” என தத்துவார்த்தமாக தனது காதலர் தின வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார் சார்மி.