ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மணிரத்னத்தின், ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். தனது அற்புதமான இசையால் உச்சத்திற்கு சென்ற ரஹ்மான் ஆஸ்கர் விருது எல்லாம் பெற்று இந்தியாவிற்கே பெருமை சேர்த்தார். இவரது குடும்பத்தில் இருந்து ஏற்கனவே இவரது சகோதரி ரஹானா, சகோதரியின் மகன் ஜி.வி.பிரகாஷ் குமார் ஆகியோர் இசையமைப்பாளராக இருக்கின்றனர். இவர்களில் ஜி.வி.பிரகாஷ்குமார் வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராகி இப்போது ஹீரோவாகவும் வளர்ந்துள்ளார்.
இந்நிலையில் ரஹ்மானின் குடும்பத்திலிருந்து இன்னொரு இசை புயல் உருவாகி வருகிறார். அவர் பெயர் இ.ஆர்.அசார் காஷிப். ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி பாத்திமாவின் மகனான இவர், சென்னை லயோலா கல்லூரியில் விஸ்காம் படித்துள்ளார். சிறுவயதில் இருந்தே இசை மீது அதிக ஆர்வம் கொண்ட அசார், இசையை முறைப்படி பயின்றவர். ரஹ்மானிடம், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட சில படங்களில் பணியாற்றியுள்ளார்.
இப்போது அசார் புதிதாக ஒரு லவ் ஆல்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார். காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த ஆல்பத்தை அட்லியிடம் உதவியாளராக இருந்த அஸ்வின் என்பவர் இயக்கியுள்ளார். ஜாவித் அலி மற்றும் பாடகர் சீனிவாஸ் மகள் சரண்யா பாடியுள்ளனர். 3.45 நிமிடம் ஓடக்கூடிய இந்த ஆல்பம் பிப்.,14ம் தேதி காதலர் தினத்தன்று வௌியாக இருக்கிறது. தனக்கென ஒரு அடையாளம் வேண்டும் என்பதற்காக இந்த ஆல்பத்தை உருவாக்கியுள்ளதாக கூறுகிறார் அசார் காஷிப்.
மேலும் அசாரை பார்ப்பவர்கள் அவர், ஏ.ஆர்.ரஹ்மான் போன்றே இருப்பதாக கூறுகிறார்கள். அசாரின் நடை, உடை, பாவனைகள் எல்லாம் ரஹ்மானை அப்படியே பிரதிபலிக்கிறதாக சொல்கிறார்கள்.