ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டின் நம்பர்-1 நடிகை தீபிகா படுகோனே. இவரை வசூல் ராணி என்று கூட சொல்லலாம். இவர் நடித்த அனேக படங்கள் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. சமீபகாலமாக நடிகைகளும், பாடகியாக மாறுவது அதிகமாகி வருகிறது. அந்தவகையில் இப்போது தீபிகா படுகோனேவும் பாடகியாக அறிமுகமாக இருக்கிறார். இவர் இப்போது தமாஷா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் தீபிகா ஜோடியாக ரன்பீர் நடிக்கிறார். இம்தியாஸ் அலி இயக்கும் இப்படத்தை சாஜித் தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் ஒருபக்கம் நடந்து வரும் அதேவேளையில் படத்திற்கான இசையமைப்பு வேலைகளும் மும்முரமாக நடந்து வருகிறது. ரஹ்மான் அற்புதமான இசையை கொடுத்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தில் ஹீரோயின் தீபிகாவும் ஒரு பாடல் பாடுகிறார். இதன்மூலம் தீபிகா பாடகியாகவும் களமிறங்கியுள்ளார்.