ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஜிகர்தண்டா மற்றும் காவியத்தலைவன் படங்களுக்குப் பிறகு சித்தார்த் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் - எனக்குள் ஒருவன். க்ரவுட் ஃபண்டிங் மூலம் உருவாக்கப்பட்டு வெற்றிபெற்ற லூசியா கன்னடத் திரைப்படம்தான் தமிழில் எனக்குள் ஒருவன் படமாக ரீமேக் ஆகியிருக்கிறது. கனவில் ஒரு வாழ்க்கை, நிஜத்தில் ஒரு வாழ்க்கை என ஹீரோ சித்தார்த்தின் இரண்டுவிதமான வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட கதை இது. எனவே எனக்குள் ஒருவன் என்ற தலைப்பு கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் கவிதாலயாவில் முறைப்படி அனுமதி பெற்று இந்தப்பெயரை சூட்டினார்கள்.
சி.வி.குமார், அபினேஷ் இளங்கோவன் ஆகியோர் இணைந்து எனக்குள் ஒருவன் படத்தை தயாரித்திருக்கின்றனர். சி.வி.குமார் தயாரித்த பல படங்களில் அஸோஸியேட் டைரக்டராக பணியாற்றிய பிரசாத் ராமர் இப்படத்தை இயக்குவதன் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார். லூசியா கன்னடப்படத்தில் கதாநாயகியாக நடித்த கன்னட நடிகை தீபா சன்னிதியே சித்தார்த்துக்கு ஜோடியாக இப்படத்தில் நடித்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் எனக்குள் ஒருவன் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பாடல்கள், டீஸர், டிரைலர் என அனைத்தும் வெளியிடப்பட்டு பல மாதங்களாகிவிட்டன. தியேட்டர் கிடைக்காத காரணத்தினால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. தற்போது, இப்படத்தை வரும் மார்ச் 6ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் செய்யும் முயற்சியில் இறங்கி இருக்கிறது ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம்.