மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
மலையாள மக்களுக்கு பிடித்த எவர்கிரீன் படங்களில் பத்து படங்களை மட்டும் பட்டியலிட்டால் அதில் 2௦ வருடங்களுக்கு முன் வெளியான மோகன்லாலின் 'ஸ்படிகம்' கட்டாயம் இடம்பெறும். தந்தை, மகன் உறவில் சிறுவயதில் இருந்தே ஏற்படும் விரிசலை ஒரு புதிய கோணத்தில் காட்டியிருந்தது இந்தப்படம். தமிழில் சுந்தர்.சி நடித்த 'வீராப்பு' இதன் ரீமேக் தான். இந்த ஸ்படிகத்தில் சின்ன வயது மோகன்லாலாக, தந்தையின் அன்புக்கு ஏங்கும் மகனாக, மாணவனாக அற்புதமாக நடித்த பையன் தான் ரூபேஸ் பீதாம்பரன்.
பின்னாளில் வளர்ந்து வாலிபனான ரூபேஸ் சினிமாவில் தனது துறையாக தேர்ந்தெடுத்தது நடிப்பை அல்ல.. டைரக்சனைத்தான். மூன்று வருடங்களுக்கு முன் துல்கர் சல்மானை வைத்து 'தீவ்ரம்' என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ரூபேஸ், தற்போது இயக்கிவரும் படம் தான் 'யூ டூ புரூட்டஸ்'. சரித்திரப்புகழ்பெற்ற இந்த வாக்கியத்தை டைட்டிலாக கொண்ட படம் என்றாலும் ஒரிஜினல் கதையைப்போல் சோக கீதம் வாசிக்காமல், முழுநீள காமெடிப்படமாக உருவாகிறதாம்.