ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இசையமைப்பாளர் இளையராஜாவின் வாரிசுகளில் யுவன் ஷங்கர் ராஜாவும் ஒருவர். ''அரவிந்தன்'' படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். பிரியாணி படம் யுவனின் 100வது படமாகும். இந்நிலையில், கடந்தாண்டு முஸ்லிம் மதத்தை தழுவிய யுவன் ஷங்கர் ராஜா, சமீபத்தில் ஜபருன்னிசா என்ற முஸ்லிம் பெண்ணை 3வது திருமணம் கொண்டார்.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் ரகசியமாக நடந்த இந்த திருமணத்தில் மணமகள் வீட்டார் சார்பில் அவரது உறவினர்கள் கலந்து கொண்டனர். யுவன் தரப்பில் அவரது சகோதரி பவதாரிணி மட்டும் கலந்து கொண்டார். இளையராஜா, கார்த்திக் ராஜா உள்ளிட்ட யாரும் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் யுவன் ஷங்கர் ராஜா, தனது மனைவி ஜபருன்னிசாவுடன் சென்று இளையராஜாவிடம் ஆசி பெற்றுள்ளார். மகன் மற்றும் மருமகளை ஆசீர்வாதம் செய்து வாழ்த்தியதோடு, மருமகளுக்கு தங்க நகைகள் சில வற்றையும் பரிசாக அளித்துள்ளார் இளையராஜா.