மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
வன்மம் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட ஒன்பது படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் விஜயசேதுபதி. இதில் ஆரஞ்சு மிட்டாய், மேற்கு தொடர்ச்சி மலை ஆகிய படங்களை தயாரித்து நடிக்கிறார். ஆரஞ்சு மிட்டாய் படத்தை பொறுத்தவரை முதன்முறையாக அப்படத்தில் வசனகர்த்தாவாக அவதரித்துள்ள விஜயசேதுபதி, ஒரு பாடலையும் பாட இருக்கிறார்.
ஆனால், படத்தின் புரோமோஷனுக்காக தயாராக இருககும் அந்த பாடலை அவரே எழுதி, பாடப்போகிறாராம். அந்த வகையில், தான் எழுதும் முதல் பாடல் மட்டுமின்றி, பாடும் முதல் பாடலும் இதுவே என்பதால், அது பேசப்படக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதற்காக, தற்போது நேரம் கிடைக்கும்போது அமர்ந்து அந்த பாடலை எழுதி வரும் விஜயசேதுபதி, அந்த டியூனுக்கேற்ப பாடியும் பயிற்சி எடுத்துக்கொண்டிருககிறார்.