சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
எங்கேயும் எப்போதும், இவன் வேறமாதிரி படங்களை இயக்கிய சரவணன் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் படம் வலியவன். ஜெய், ஆண்ட்ரியா நடிக்கிறார்கள். படத்தின் பெரும்பாண்மையான படப்பிடிப்புகள் முடிவடைந்து படப்பிடிப்பிற்கு பிந்தைய பணிகள் நடந்து வருகிறது.
ஜெய் நடிக்கும் முதல் முழுநீள ஆக்ஷன் படம் இது. இதற்காக அவர் ஹாங்காங் சிறப்பு பயிற்சியாளர் ஒருவரை அழைத்து வந்து சிக்ஸ் பேக் வைத்துள்ளார். இதற்காக 6 மாதம் தீவிர பயிற்சியில் இருந்தார். படத்தில் ஆக்ஷன் போர்சன்கள் தான் அதிகம், டயலாக் போர்ஷன் குறைவு இதனால் டப்பிங்கை 24 மணிநேரத்தில் முடித்திருக்கிறார் ஜெய்.
வலியவனை எஸ்.கே.ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார், இமான் இசை அமைத்துள்ளார். பொதுவாக தமிழ்நாட்டு ஹீரோக்கள் சிக்ஸ்பேக் வைத்து நடித்த படங்கள் பெரிதாக வெற்றிபெறவில்லை. விஷால் (சத்யம்), பரத் (555), ஆர்யா (நான் கடவுள்), அதர்வா (இரும்பு குதிரை), ஆதி (அரவான்) இப்படி நிறைய இருக்கிறது. இந்த சென்டிமெண்ட்டை ஜெய் உடைப்பாரா என்று பார்க்க வேண்டும்.