Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

ஜனவரி மாத திரைப்படங்கள் ஒரு பார்வை...!

02 பிப், 2015 - 10:09 IST
எழுத்தின் அளவு:

2014ம் ஆண்டில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்து ஒரு புதிய சாதனையைப் படைத்தது. அது இந்த ஆண்டும் தொடர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 2015ம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தில் மட்டும் 18 படங்கள் வெளிவந்தன. அந்த படங்கள் என்னென்ன...? இப்போது பார்ப்போம்...


கடந்த மாதம் வெளிவந்த படங்கள்...


ஜனவரி 2


திருவிக பூங்கா


விருதலாம்பட்டு


விஷயம் வெளியே தெரியக் கூடாது


ஜனவரி 9


வேட்டையாடு


கிழக்கே உதித்த காதல்


ஜனவரி 14



ஆய்வுக்கூடம்


ஜனவரி 15


ஆம்பள


டார்லிங்


ஜனவரி 23


அரூபம்


அப்பாவி காட்டேரி


தொட்டால் தொடரும்


ஜனவரி 29


புலன் விசாரணை 2


ஜனவரி 30


டூரிங் டாக்கீஸ்


கில்லாடி


தரணி


இசை,


ஆகிய 17 படங்கள் வெளிவந்துள்ளன.


இவற்றில் “ஐ, ஆம்பள, டார்லிங், இசை” ஆகிய படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன. 'ஐ, டார்லிங்' ஆகிய இரண்டு படங்கள் வியாபார ரீதியாக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாகவும், 'ஆம்பள' படம் சுமாரான வெற்றியைப் பெற்றுள்ளதாகவும் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'இசை' படத்திற்கான வியாபார வசூல் எவ்வளவு என்பது இன்னும் சில நாட்களில்தான் தெரிய வரும். மற்ற படங்கள் தயாரிப்புச் செலவை விட மிக மிகக் குறைவான வசூலைப் பெற்ற படங்களாகவே அமைந்துள்ளதாகத் தெரிவிக்கிறார்கள்.


விக்ரம், விஷால், பிரசாந்த், பரத், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்து வெளியான ஐந்து படங்களில்தான் தெரிந்த முகங்கள் நடித்திருக்கிறார்கள். மற்ற படங்களில் வளரும் நடிகர்களோ அல்லது புதுமுகங்களோதான் நடித்திருக்கிறார்கள்.


எஸ்.ஏ.சந்திரசேகரன், ஷங்கர், சுந்தர் .சி, ஆர்.கே.செல்வமணி, எஸ்.ஜே.சூர்யா, ஏ.வெங்கடேஷ் ஆகியோர்தான் பல படங்களை இயக்கிய இயக்குனர்கள். மற்றவர்களெல்லாம் புதுமுக இயக்குனர்கள்தான்.


'ஆம்பள' படத்தில் மட்டுமே முன்னணி நாயகியான ஹன்சிகா நடித்திருந்தார். 'ஐ' படத்தில் நடித்ததன் மூலம் எமி ஜாக்சன் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்துவிட்டார்.


ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த 'ஐ' படத்தின் பாடல்கள் தான் மிகப் பெரிய ஹிட் வரிசையில் சேர்ந்துள்ளது. 'டார்லிங்' படத்தின் பாடல்கள் சுமாரான ஹிட்டாகவும், 'ஆம்பள' படத்தின் பாடல்கள் எதிர்பார்த்தது போலவும் அமையவில்லை.


'இசை' படத்தில் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகியுள்ள எஸ்.ஜே.சூர்யா ஒரு சில இனிமையான பாடல்களைக் கொடுத்திருக்கிறார். இசையமைப்பாளராக இருந்து நாயகனாக 'டார்லிங்' படம் மூலம் அறிமுகமான ஜி.வி.பிரகாஷ்குமாரின் முதல் படமே வெற்றிப் படமாக அமைந்துவிட்டது.


இந்த 17 படங்களிலும் சில படங்கள் ஒரு வாரத்திற்கும் குறைவான படங்களாகவும், சில படங்கள் ஒரு சில நாட்கள் படங்களாகவும், சில படங்கள் ஒரு சில காட்சிகள் மட்டுமே ஓடிய படங்களாகவும் அமைந்துள்ளன.


சில படங்கள் திரையரங்குகளில் ஓடவில்லை என்றாலும் அந்த திரையரங்குகளின் பெயர்களைப் போட்டு 'மகத்தான வெற்றி' என்று விளம்பரம் செய்யும் வேலைகளும் நடந்திருக்கிறது.


100 கோடி வசூலைக் கடந்த படமாக ஆண்டின் முதல் மாதத்தில் வெளிவந்த 'ஐ' படம் அமைந்துவிட்டது.


ஜனவரி மாதத்தில் வெளியான படங்களைப் பொறுத்தவரையில் வெற்றி விகிதம் எவ்வளவு என்று கணக்கிட்டால் வெறும் 11 சதவீதம் மட்டுமே.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in