ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சினிமா துறையில், தேசிய விருதுக்கு பிறகு இந்தியாவில் மிகவும் பிரபலமானது பிலிம்பேர் விருதுகள். ஒவ்வொரு ஆண்டும் பிலிம்பேர் விருதுகள் வழங்கப்படுகிறது. அதன்படி 60வது பிலிம்பேர் விருதுகள் டில்லியில் நடந்தது. இதில், கங்கனா ரணாவத் நடித்த ''குயின்'' படத்திற்கு 6 விருதுகளும், ஷாகித் கபூர் நடித்த ''ஹைடர்'' படத்திற்கு 5 விருதுகளும் கிடைத்தன.
குயின் - 6 விருதுகள்
குயின் படத்திற்கு 6 பிலிம்பேர் விருதுகள் கிடைத்துள்ளது. திருமணம் நின்று போன ஒரு பெண் ஹனிமூனுக்காக எடுத்து வைத்திருந்த டிக்கெட்டில், பிரான்சு தலைநகர் பாரிசுக்கு தனியாக பயணிக்கும் போது அங்கு அவள் சந்திக்கும் நிகழ்வுகளை மையமாக வைத்து குயின் எனும் அழகான படத்தை இயக்கி இருந்தார் விகாஸ் பால். கங்கனா ரணாவத் முக்கிய ரோலில் நடித்திருந்தார். குயின் படத்திற்கு, சிறந்த படம், சிறந்த நடிகை(கங்கனா), சிறந்த இயக்குநர்(விகாஸ் பால்), சிறந்த இசை உள்ளிட்ட 6 பிரிவுகளில் விருது கிடைத்துள்ளது.
ஹைடர் - 5 விருதுகள்
காஷ்மீர் பிரச்னையை மையமாகக் கொண்டு கடந்தாண்டு வௌியான படம் ஹைடர். ஷாகித் கபூர் நடித்த இப்படத்தை விஷால் பரத்வாஜ் இயக்கிருந்தார். இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் இதில் நடித்த ஷாகித் கபூருக்கு சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருது கிடைத்துள்ளது. அத்துடன் சிறந்த துணை நடிகை (தபு), சிறந்த துணை நடிகர் (கே.கே.மேனன்) உள்ளிட்ட 5 பிரிவுகளில் ஹைடர் படத்திற்கு விருதுகள் கிடைத்துள்ளது.
இந்த இரண்டு படங்கள் தவிர அமீர்கானின் ''பிகே.'' மற்றும் ''2 ஸ்டேட்ஸ்'' படத்திற்கு தலா இரண்டு விருதுகள் கிடைத்துள்ளது.
விருது வழங்கும் நிகழ்ச்சியுடன் நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சியும் நடந்தது. இந்த விழாவில் ஏராளமான பாலிவுட் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.