ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நடிகர்கள் தயாரிப்பாளர்கள் ஆவதைப்போல கேமராமேன்களும் தயாரிப்பாளர்களாக மாறி வருகிறார்கள். பி.ஜி. முத்தையா ஒரு பக்கம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து கொண்டு இருந்தாலும் இன்னொரு பக்கம் பட தயாரிப்பு வேலையில் இறங்கி விட்டார். தற்போது சுசிந்தரனிடம் உதவி இயக்குனராக இருந்த பெண் இயக்குநர் உஷா இப்படத்தை இயக்குகிறார். மெட்ராஸ் படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்த கலை நாயகன். நாயகி தேர்வு நடந்து வருகிறது. படத்துக்கு தலைப்பு இன்னும் முடிவு செய்யவில்லை. அடுத்த மாத இறுதியில் படபிடிப்பு தொடங்க உள்ளது. இதன் மூலம் கோடம்பாக்கத்தில் பெண் இயக்குனர்களின் பட்டியல் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே ப்ரியா ஆனந்த், மதுமிதா என பலர் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பெண் இயக்குனர் சங்கம் ஒன்றை உருவாக்கவும் திட்டம் தீட்டி வருகிறார்கள் என்பது விஷேசம்.