ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வெண்ணிலா கபடிக்குழு படத்தில் அறிமுகமானவர் விஷ்ணு. சினிமாவுக்கு வருவதற்கு முன்பு தமிழ்நாடு அளவில் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டு வந்தார். ஒருமுறை விளையாடியபோது ஏற்பட்ட விபத்து காரணமாக சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த அவர், பின்னர் கிரிக்கெட்டுக்கு முழுக்குப்போட்டு விட்டு சினிமாவில் இறங்கினார்.
அப்படி வந்தவருக்கு முதல் படமே ஹிட்டாக அமைந்தது. அதையடுத்து, பலே பாண்டியா, நீர்ப்பறவை, குள்ளநரிக்கூட்டம், முண்டாசுப்பட்டி, ஜீவா என பல படங்களில் நடித்தார். அந்த வகையில் வெற்றி தோல்வி இரண்டையும் மாறி மாறி சந்தித்து வந்த விஷ்ணு இன்னும் நடிப்பு அளவில் பெரிய ஸ்கோர் எதுவும் செய்து விடவில்லை.
இருப்பினும், முன்பெல்லாம் மீடியாக்களுக்கு பேட்டி கொடுப்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்த விஷ்ணுவுக்கு தற்போது அந்த ஆர்வம் சுத்தமாக குறைந்து விட்டது. கேட்டால், வளரும்போதுதான் நடிகர்களுக்கு பப்ளிசிட்டி தேவை. ஆனால் வளர்ந்த பிறகு அது அவசியமில்லை. நான் நடிக்கும் படங்கள் நன்றாக இருந்தால் கண்டிப்பாக ஓடும். படம் நன்றாக இருக்கும்போது அதன் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்றும் தில்லாக சொல்கிறாராம் விஷ்ணு.