மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தின் வெளியீட்டு தேதி அடிக்கடி தள்ளி வைக்கப்பட்டதால் பல படங்களிள் ரிலீஸ் தேதி சிக்கலை சந்தித்து வருகிறது. கொம்பன், காக்கி சட்டை, அனேகன் உட்பட பல படங்களின் ரிலீஸ் தேதி பிரச்னையாகி உள்ளது. என்னை அறிந்தால் ஜனவரி 29 அன்று ரிலீஸ் என்று சொல்லப்பட்டதை நம்பி, பிப்ரவரி 13 அன்று அனேகன் படத்தை வெளியிட தீர்மானித்து தியேட்டர்களை கமிட் பண்ணினார்கள். ஏறக்குறைய 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களை கமிட் பண்ணிவிட்டநிலையில், என்னை அறிந்தால் படம் ஜனவரி 29 ஆம் தேதிக்கு ரிலீஸ் இல்லை, பிப்ரவரி 5 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்தார் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்.
அவருடைய இந்த அறிவிப்பு அனேகன் தயாரிப்பாளரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. என்னை அறிந்தால் பிப்ரவரி 5 அன்று வெளியானால், அதற்கு அடுத்த வாரமே அதாவது பிப்ரவரி 13 அன்று அனேகன் படத்தை வெளியிடும்போது தியேட்டர்கள் கிடைக்காது. ஏறக்குறைய 250 தியேட்டர்களில் என்னை அறிந்தால் ஓடிக்கொண்டிருக்கும். எனவே அனேகன் படத்துக்கு தியேட்டர் தர முன் வர மாட்டார்கள். இந்த நடைமுறை பிரச்சனையை கருத்தில் கொண்டு அனேகன் படத்தின் ரிலீஸ் தேதியை பிப்ரவரி 20 ஆம் தேதிக்கு தள்ள வைக்க தீர்மானித்திருக்கிறார் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம்.