ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
செகண்ட் இன்னிங்சில் ஜெயம் ரவியுடன் அப்பாடக்கர் படத்தில் நடித்து வரும் அஞ்சலி, அந்த படத்துக்காக இரண்டு மாதங்களாக டயட்ஸ் கடைபிடித்து தனது பெருத்த உடம்பை கட்டுப்படுத்தினார். அதோடு அவர் கிராமத்து வேடத்தில் நடிப்பதால் படம் முழுக்க பாவாடை தாவணி கெட்டப்பில் நடித்திருக்கிறார். அதனால் மீண்டும் பழைய அஞ்சலியை பார்த்தது மாதிரியே அவரது தோற்றம் இருந்ததாம். ஆனால், அப்பாடக்கர் படத்தை முடித்து விட்டு ஐதராபாத்துக்கு திரும்பிய அஞ்சலி, அதையடுத்து விமலுடன் மாப்பிள்ளை சிங்கம் படத்தில் நடிப்பதற்காக திரும்பி வந்தபோதும் மீண்டும் ஒரு சுற்று பெருத்துப்போய் இருந்தாராம். விமல் அருகே அவர் நின்றபோது ஜோடிப்பொருத்தம கொஞ்சமும் மேட்சாகவில்லையாம்.
அதனால், தற்போது மறுபடியும் அவரை உடல் இளைக்க வைத்திருக்கிறார்களாம். அதோடு, ஆந்திராவுக்கு சென்றால் எக்கச்சக்கமாக அவர் பெருத்து விடுகிறார் என்பதால் சென்னையிலேயே முகாமிட வைத்து ஸ்லிம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். மேலும், ஐதராபாத்துக்கு சென்ற பிறகு தனது முன்னாள் ஹீரோக்களுடன் டச் இல்லாமல் இருந்து வந்த அஞ்சலி, இப்போது ஆர்யா, ஜெய் உள்ளிட்ட சிலரை மரியாதை நிமித்தமாக சந்தித்து மீண்டும் நட்பு வளர்க்கத் தொடங்கியிருக்கிறார்.