Advertisement

சிறப்புச்செய்திகள்

ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இணையத்தில் வெளியான பாகுபலி; தயாரிப்பாளர் போலீசில் புகார்

27 ஜன, 2015 - 10:37 IST
எழுத்தின் அளவு:

தமிழ் சினிமாவுக்கு எப்படி இயக்குநர் ஷங்கர் அவரது பிரம்மாண்டத்தை காட்டுவாரோ அதுமாதிரி தெலுங்கிலும் அந்த பிரம்மாண்டத்தை காட்டிக் கொண்டிருப்பவர் இயக்குநர் ராஜமௌலி. இவரது இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் பாகுபலி படத்தை தான் ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ரசிகர்கள் பெரிதும் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்கள்.


ஆனால் இரண்டு வருடத்திற்கும் மேலாக இந்த படத்தை எடுப்பதாலோ என்னவோ படத்தின் 12 நிமிட காட்சியை யாரோ இணையத்தில் வெளியிட்டுவிட்டார்கள். இதை அறிந்த ராஜமௌலி உடனே அவரது டெக்னிக்கல் டீமை வைத்து அந்த வீடியோவை இணையத்திலிருந்து அழித்திருக்கிறார், மேலும் அந்த வீடியோ எங்கேயாவது பதிவிறக்கம் மற்றும் சமூக வலைத்தளங்களில் இருக்கிறதா என்றும் அலசி ஆராய்ந்திருக்கிறார்கள் நல்லவேளை அப்படி எதுவும் நடக்கவில்லை.


ஒரு தடவை பாதிக்கப்பட்டுவிட்டதால் இனி பாகுபலி டீமிலிருந்து ஒரு மூச்சு காற்று கூட இயக்குநருக்கு தெரியாமல் வெளியாகாது என்றளவுக்கு கிசுகிசுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த செயலை செய்தவரை கண்டுபிடிக்குமாறு போலீசில் புகார் அளித்தார் பாகுபலி தயாரிப்பாளர். போலீசும் உடனே இந்த வழக்கை கையில் எடுத்து அதிரடி ஆக்ஷனில் இறங்கி அவரை கண்டுபிடித்துள்ளது.


அது யாருமில்லை பிரபல கிராஃபிக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு ஊழியர், பாகுபலி படத்தின் கிராஃபிக்ஸ் வேலைகளிலும் இவர் இருந்துள்ளதால்தான் இந்த காட்சிகள் அவர் கைக்கு சென்றுள்ளது, தற்போது அந்த வேலையில் அவர் இல்லையென்பதால் பாகுபலி படத்தின் காட்சிகளை இணையத்தில் ஏற்றியுள்ளார். இவரை போலீசார் கைது செய்துவிட்டனர். இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா என்ற பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். இசை கீரவாணி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in