Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வீரமரணமடைந்த தமிழக ராணுவ வீரர்களை தனது படத்தில் கௌரவப்படுத்திய மேஜர் ரவி..!

26 ஜன, 2015 - 10:45 IST
எழுத்தின் அளவு:

கடந்த வருடம் காஷ்மீரில் தீவீரவாதிகளுடன் நடைபெற்ற தாக்குதலின்போது வீரமரணம் அடைந்தவர் சென்னையை சேர்ந்த முகுந்த் வரதராஜன். அவரது மரணத்துக்கு நாடே அஞ்சலி செலுத்தியதுடன் உரிய ராணுவ மரியாதையுடன் சென்னையிலேயே அவரது உடல் நல்லடக்கமும் செய்யப்பட்டது. அந்த சமயத்தில் நடிகர் விஜய்கூட, முகுந்த் வரதராஜன் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்னதோடு கொஞ்சநேரம் ஒதுக்கி, முகுந்த் வரதராஜனின் மூன்று வயது மகளான ஆர்ஷேயாவுடன் விளையாடி, அவரை சந்தோஷப்படுத்தினார்.


தற்போது பிருத்விராஜ் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகியுள்ள 'பிக்கெட்-43' படத்தில் முகுந்த் வரதராஜனை கௌரவப்படுத்தி இருக்கிறார் படத்தின் இயக்குனரான மேஜர் ரவி.. இதில் அபாயகரமான எல்லைப்பகுதியில் காவல் காக்கும் பிருத்விராஜ், தனது தலைமை அலுவலக தகவல் அதிகாரியிடம் ஒவ்வொருவரின் நலன் பற்றி விசாரிப்பார்.. அப்போதுதான், தீவிரவாதிகளின் தாக்குதலில் முகுந்த் பலியாகிவிட்டதாக பிருத்வியிடம் சொல்வார் அந்த அதிகாரி. அதைக்கேட்டு அதிர்ச்சியடையும் பிருத்விராஜ், “அடடா அவருக்கு மூன்று வயதில் ஒரு குழந்தை இருக்கிறதே” என்று கூறி தனது வருத்தத்தை வெளிப்படுத்துவார்.


அதுமட்டுமல்ல, 1999ல் நடைபெற்ற கார்கில் போரின்போது வீர மரணமடைந்த மேஜர் சரவணனையும் ஞாபகப்படுத்த மேஜர் ரவி தவறவில்லை. இந்தப்படத்தில் 'பிக்கெட்-43' பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த மேஜர் சரவணன் எதிரிகளின் தாக்குதலால் வீர மரணம் அடைவதாகவும், அதை தொடர்ந்து அவரது பணியிடத்திற்கு பிருத்விராஜ் பணியமர்த்தப்படுவதாகவும் காட்சியமைக்கப்பட்டுள்ளது. கதையில் தமிழக ராணுவ வீரர்கள் இருவரையும் உருவம் இல்லாத கதாபாத்திரங்களாக காட்டியும், அவர்களது தியாகத்தை ஞாபகமூட்டியும் அவர்களை கௌரவப்படுத்தியுள்ளார் மேஜர் ரவி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in