ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
இயக்குனர் பி.வாசுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கே.மூர்த்தி கண்ணன், தனியாக இயக்கும் படம் சாலையோரம். ராஜ், ஷெரீனா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இவர்களுடன் பாண்டியராஜன், முத்துக்காளை, லொள்ளு சபா மனோகரன், பாய்ஸ் ராஜன் ஆகியோரும் நடிக்கிறார்கள். சிங்கப்பூரைச் சேர்ந்த சேதுராம் இசை அமைக்கிறார்,
"நாகப்பட்டினம், காரைக்கால், கொடைக்கானல் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. தற்போது இறுதிகட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடந்து வருகிறது. இதுவரை எந்த சினிமாவிலும் கையாளப்படாத புதிக களத்தில் சொல்லப்படும் கதை. இப்போது அதைச் சொன்னால் மற்றவர்கள் அதனை எடுத்து கையாளக்கூடும் என்பதால் சொல்ல இயலாது. நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களின் உணர்வுகளையும், மன இயல்புகளையும் சொல்கிற படம்" என்கிறார் இயக்குனர் கே.மூர்த்தி கண்ணன்.