ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அழகிய பாண்டிபுரம், விருதாலம்பட்டு, ஆலமரம், மனம் கொண்ட காதல் என பல படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்தவர் ஜாய்மதி. தற்போது ராட்டினம் ஹீரோ லகுபரன் நடிக்கும் அயலான், ஏ.எல்.உதயா நடிக்கும் ஆவிகுமார், இர்பான் நடிககும் ரு, மற்றும் சைகை - என பல படங்களுக்கு நடனம் அமைத்து வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார்.
அவரிடத்தில், ஒரு நடன மாஸ்டரின் உழைப்பும், திறமையும் எப்போது வெளிப்படும் என்று கேட்டால், இப்போதெல்லாம் குத்துப்பாட்டுதான் டான்ஸ் மாஸ்டரின் திறமையை வெளிக்கொண்டு வரும் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் அது தவறான கருத்து. என்னைக்கேட்டால், மெலோடியான டூயட் பாடல்களிலும் நன்றாக நடனம் அமைத்தால் அது ரீச்சாகி விடும். எனக்குகூட சைகை படத்தில் ஒரு டூயட்டுக்கு நான் நடனம் அமைத்ததைப் பார்த்து விட்டுத்தான் அழகிய பாண்டிபுரம் படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அபிநயமான அந்த பாடல் என்னை பேச வைத்தது.
மேலும், எந்தமாதிரியான நடனமாக இருந்தாலும் பாட்டு நன்றாக இருந்தால் மக்கள் அந்த நடனத்தை கட்டாயம் ரசிப்பார்கள். பாடல்களை அவர்கள் ரசிக்கும் நிலை வரும்போதுதான் அதில் இடம்பெற்றிருக்கும் நடனத்தையும் ரசிப்பார்கள். அதனால் என்னதான் நடன மாஸ்டர்களான நாங்கள் கடினமாக உழைத்தாலும், சம்பந்தப்பட்ட பாடல்கள் ஹிட்டாக வேண்டும். இல்லாதபட்சத்தில் எங்களது உழைப்பெல்லாம் வீணாகி விடும். ஆக என்போன்றவர்களின் வெற்றியை தீர்மானிப்பது இசையமைப்பாளர்கள் கொடுக்கும் ஹிட் பாடல்களில்தான் உள்ளது.
அதாவது, பாடலுக்கான உருவத்தை இசையமைப்பாளர்கள் தருகிறார்கள். அதற்கு நாங்கள் டிரஸ் போட்டு அழகுபடுத்துகிறோம். ஆனால் அந்த உருவம் அழகாக இருந்தால்தான் நாங்கள் அதற்கேற்ற டிரஸ் தயார் பண்ண முடியும். இல்லையேல், நாங்கள் உருவாக்கும் டிரஸ் என்கிற நடனம் அழகில்லாமல் போய் விடும் என்று கூறும் டான்ஸ் மாஸ்டர் ஜாய்மதி, தற்போது நான் நடனம் அமைத்துள்ள அயலான், ஆவிகுமார், ரு, சைகை போன்ற படங்களின் இசையமைப்பாளர்கள் அருமையான பாடல்களை கொடுத்திருக்கிறார்கள். நானும் அற்புதமான நடனத்தை கொடுத்திருக்கிறேன். அதனால் இந்த படங்கள் வெளியாகி பாடல்கள் ஹிட்டாகும்போது எனது நடனமும் கவனிக்கப்படும். அதையடுத்து, கோலிவுட்டில் நானும் பேசப்படும் டான்ஸ் மாஸ்டராகி விடுவேன் எனறு நம்பிக்கையுடன் சொல்கிறார் ஜாய்மதி.