ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரிக்கமுடியாதது எது என திருவிளையாடல் தருமி பாணியில் கேட்டால், தயங்காமல், மேஜர் ரவியும் அவரது ராணுவ படங்களும் என தாராளமாக சொல்லலாம்.. ராணுவத்தில் மேஜராக பணியாற்றிவிட்டு சினிமாவுக்குள் நுழைந்த அவர் மம்முட்டி, மோகன்லாலை வைத்து சகட்டுமேனிக்கு ராணுவப்படங்களாக இயக்கித்தள்ளினார். பிருத்விராஜ் நடிப்பில் மேஜர் ரவி இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள 'பிக்கெட்-43' படமும் கூட ராணுவ கதைக்களம் தான்.
ஆனால் தொடர்ந்து ராணுவ கதைகளாக எடுப்பதால் தன மீது விழுந்துள்ள ராணுவ இமேஜை மாற்றும் எண்ணம் இப்போது மேஜருக்கு தோன்றியுள்ளது.. முன்பு தந்தை மகள் பாசத்தை வைத்து மோகன்லால் நடிப்பில் அவர் இயக்கிய 'கர்மயோதா' படம் கூட போலீஸ்-தீவிரவாதி என்கிற லேபிளோடுதான் வெளியானது. அதனால் அடுத்து அவர் இயக்கவிருப்பது அருமையான குடும்ப பின்னணி கொண்ட கதைதானாம்.. அப்படி ஒரு கதையை தயார் செய்து, அவரது பேவரைட் நடிகரான மோகன்லாலிடம் சொல்ல, அது அவருக்கும் பிடித்துப்போய் ஓகே சொல்லிவிட்டாராம்.