ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பொங்கலுக்கே வெளியாகி இருக்க வேண்டிய கௌதம் மேனனின் என்னை அறிந்தால் திரைப்படம் வரும் 29 ஆம் தேதி படம் வெளியாகும் என தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அறிவித்திருந்தார். பிறகு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டு தற்போது பிப்ரவரி 5 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. டிஐ என்கிற கலர் கிரேடிங் வேலைகள் இன்னும் முடியவில்லை. அதற்கு சில நாட்கள் தேவைப்படுவதால் இந்த தேதி மாற்றம் என்கிறார்கள் என்னை அறிந்தால் யூனிட்டைச் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் இன்று என்னை அறிந்தால் படத்தை தணிக்கைக்குழுவினர் பார்க்க உள்ளனர். அதற்கு முன் கௌதம்மேனன் அஜித் என சிலர் மட்டும் என்னை அறிந்தால் படத்தைப் பார்த்திருக்கின்றனர். அதன் அடிப்படையில், என்னை அறிந்தால் படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு என்ற தகவல் கசிந்திருக்கிறது. மொத்தம் 2 மணி, 32 நிமிடங்கள் ஓடும் படமாக என்னை அறிந்தால் படத்தை உருவாக்கி இருக்கிறார்களாம்.
ஆக்ஷன் த்ரில்லராக இப்படம் உருவாகியிருப்பதால், சென்சாரில் தணிக்கை செய்யும்போது பல இடங்களில் கட் கொடுக்கப்பட வாய்ப்பிருக்கிறது. அப்படி கட் கொடுக்கப்பட்டால் படத்தின் நீளம் மேலும் குறைவதற்கு வாய்ப்பிருக்கிறதாம். படம்.... லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வரும் என அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஏமாத்திடாம இருந்தால் சரி..!