நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி | இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்களுக்குள் இவ்வளவு ஒற்றுமையா? | முக்கிய நிபந்தனையுடன் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு திரும்பும் கிச்சா சுதீப் | '2018' பட இயக்குனரின் டைரக்ஷனில் கதாநாயகியாக அறிமுகமாகும் மோகன்லாலின் மகள் | தான் படித்த கல்லூரியின் பாடத்திட்டத்தில் இடம்பெற்ற மம்முட்டியின் வாழ்க்கை வரலாறு | மத்திய அமைச்சருக்கே இந்த நிலை என்றால் ? சுரேஷ்கோபி பட சென்சார் சர்ச்சை குறித்து மாநில அமைச்சர் காட்டம் | மீண்டும் துடிப்புடன் படப்பிடிப்புக்கு தயாரான மம்முட்டி | ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் |
தொடர்ந்து அடுத்தடுத்த பல படங்களில் நடித்து வருவதால் நடிகர் விஜய் ரொம்பவே பிஸியாக உள்ளார். ஏற்கனே பல படங்களில் ஒப்பந்தம் ஆகி உள்ள விஜய் தற்போது களவாணி பட இயக்குனர் சற்குணத்தின் புதிய படத்திலும் ஒப்பந்தம் ஆகி உள்ளார். இந்த படத்தில் விஜய் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க உள்ளார். போக்கிரிக்கு பின் விஜய் போலீஸ் வேடத்தில் வர இருக்கும் அடுத்த படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது காவலன் படத்தில் நடித்து வரும் விஜய், வேலாயுதம் படத்தின் இறுதி கட்ட வேலையையும் ஒருபுறம் கவனித்து வருகிறார். அதன் பிறகு ஷங்கர் இயக்கத்தில் 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக்கிலும் நடிக்க உள்ளார். மேலும் சீமானின் பகலவன் படத்திலும் விஜய் ஒப்பந்தம் ஆகி உள்ளார். இந்த படங்கள் அனைத்தையும் முடித்த பிறகு சற்குணத்தின் புதிய படத்தின் பணிகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.