Advertisement

சிறப்புச்செய்திகள்

சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சமந்தாவிற்கு இன்னும் 'சரி' சொல்லாத டிவிட்டர்!

22 ஜன, 2015 - 10:01 IST
எழுத்தின் அளவு:

நட்சத்திரங்கள் சமூக வலைத்தளங்களில் புகழ் பெறுவது தற்போது அதிகமாக நடந்து வரும் ஒன்று. எல்லா நடிக, நடிகையர்களுக்கும் அப்படிப்பட்ட புகழ் எளிதில் கிடைத்து விடுவதில்லை. ஒரு சிலருக்கு மட்டும்தான் அதிகமான தொடர்பாளர்களும், அவர்கள் பதிவிடும் கருத்துக்களுக்கு அதிக லைக்குகளும் கிடைக்கின்றன.


டுவிட்டர் வலைத்தளத்தில்தான் திரையுலகப் பிரபலங்கள் பலர் செயல்படுகிறார்கள். அவர்கள் ஃபேஸ்புக்கை அதிகமாக பயன்படுத்துவதில்லை. டுவிட்டரில் த்ரிஷா, ஸ்ருதிஹாசன், சமந்தா, ஹன்சிகா ஆகியோருக்குத்தான் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தொடர்பாளர்கள் இருக்கிறார்கள். சமந்தாவிற்கு சில வாரங்களுக்கு முன்னர்தான் அவரைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தைத் தாண்டியது. ஹன்சிகாவைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை கடந்த வாரம்தான் பத்து லட்சத்தைத் தொட்டது.


டுவிட்டரில் கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட லட்சத்தைத் தாண்டினால்தான் டுவிட்டரால் உறுதிப்படுத்தப்பட்ட கணக்காக அறிவிக்கப்படும். அவர்கள் பெயருக்குப் பக்கத்தில் ஒரு 'டிக்' மார்க் இருக்கும். அதுதான் உறுதிப்படுத்தப்பட்டதற்கான அடையாளம். கடந்த வாரம் பத்து லட்சத்தைத் தொட்ட ஹன்சிகாவின் கணக்கு உறுதிப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால், இன்னும் சமந்தாவின் கணக்கை உறுதிப்படுத்தப்பட்டது என டுவிட்டர் அறிவிக்கவில்லை.


சமந்தா முதலில் ஒரு கணக்கை ஆரம்பித்து அதை நீக்கி விட்டு பிறகு வேறு ஒரு புதிய கணக்கை ஆரம்பித்ததால்தான் அவருடைய கணக்கு இன்னும் உறுதிப்படுத்தப்படாமலே இருக்கிறது. சமந்தாவே டிவிட்டரைத் தொடர்பு கொண்டால்தான் அவருக்கு அந்த அங்கீகாரம் கிடைக்கும் என சமூக வலைத்தள வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in