Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ் - கன்னடம் மொழிகளில் உருவாகும் “அதர்வணம்"

21 ஜன, 2015 - 14:41 IST
எழுத்தின் அளவு:

தமிழ் திரையுலகம் டிஜிட்டல்மயமாக மாறுவதற்கு முழுமையாக அடித்தளம் அமைத்து தந்த முதல் கமர்ஷியல் டிஜிட்டல் வெற்றிப்படமான 'சிலந்தி' படத்தை எழுதி இயக்கிய ஆதிராம், தமிழ், கன்னடம் மொழிகளில் இயக்கி வரும் மிரட்டலான த்ரில்லர் படம் 'அதர்வணம்'. இந்த படத்தை ஆர். மனோஜ்குமார் யாதவ் புரொடக்ஷன்ஸ் சார்பில் திருமதி பிரியாரமேஷ் வழங்க, எஸ்.ரமேஷ் 'ரணதந்த்ரா' என்ற பெயரில் கன்னடத்தில் பிரமாண்டமாக தயாரித்து வருகிறார். கன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்த டாக்டர் ராஜ்குமாரின் மருமகன் விஜயராகவேந்திரா இப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். சென்னை திரைப்படக் கல்லூரியில் நடிப்பு பயிற்சி பெற்ற இவர் நடிக்கும் 37-வது படம் இது. இவர் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றவர்.


தமிழில் அர்ஜுன் ஜோடியாக வல்லக்கோட்டை, கனகவேல் காக்க, முரண், வாராயோ வெண்ணிலாவே, படங்களில் நடித்திருக்கும் ஹரிப்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் நடிக்கும் 28வது படம் இது. இவர்களுடன் விஷால் ஹெக்டே, ஐஸ்வர்யா, சத்யஜித், மது, ரங்கா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


தமிழில் சிம்பு நடித்த சரவணா, சரத்குமாரின் வைத்தீஸ்வரன், உள்ளிட்ட ஏராளமான தென்னிந்திய மொழிப்படங்களில் கதாநாயகியாகவும், கவர்ச்சி நாயகியாகவும் கலக்கி வரும் மேக்னா நாயுடு ஒரு கெத்துப்பாடலுக்கு செமத்தியாக குத்தாட்டம் போட்டுள்ளார். சிறுத்தை படத்தின் ' அழகாப் பொறந்துபுட்ட ஆறடி சந்தனக்கட்ட....' பாடலுக்குப் பிறகு மேக்னாவின் அதிரடி ஆட்டம் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது.


'சிலந்தி' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி தெலுங்கில் 3 படங்களுக்கு இசையமைத்திருக்கும் எம். கார்த்திக் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மழை, லீ , உன்னைச் சரணடைந்தேன், ராமன் தேடிய சீதை, பொக்கிஷம் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளி ஓவியம் தீட்டிய ராஜேஷ்.கே நாராயண் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பாடல்களை நா,முத்துக்குமார், சினேகன் , ஏக்நாத், நெல்லைபாரதி ஆகியோர் எழுதியிருக்கின்றனர். 'லக்கா லக்கா லடுக்கி' என்ற குத்துப்பாடலை ஆதிராம் எழுதியிருக்கிறார்.


' மரியான் ' புகழ் ராதிகா , கலை ஆகியோர் நடனக் காட்சிகளை அமைத்துள்ளனர். விறுவிறுப்பான படத்தொகுப்பை ஸ்ரீகாந்த் கவனிக்கிறார். சண்டைக்காட்சி : மாஸ் மாதா, தயாரிப்பு வடிவமைப்பு : v.முருகதாஸ். மக்கள் தொடர்பு : A.ஜான்.


அதர்வணம் படத்தின் கதை, திரைக்கதை , வசனம் எழுதி இயக்குவதுடன், தனது டிஜிட்டல் தியேட்டர்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் இந்தப்படத்தை பிரமாண்டமாகத் தயாரித்து வருகிறார், ஆதிராம். சென்னை, பெங்களூர், மைசூர், ஷிமோகா, கோவா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது.


படத்தை பற்றி இயக்குனரிடம் கேட்டபோது, “ ஒரு காதல் ஜோடியின் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத சம்பவங்கள், அவர்களை மரணத்தின் பிடியில் சிக்க வைக்கிறது, அந்த சூழ்நிலையில் இருந்து தப்பினார்களா, இல்லையா என்பதை நெஞ்சம் படபடக்க சீட்டின் நுனியில் உட்காரவைக்கும் அளவுக்கு பரபரப்பாக படமாக்கி இருக்கிறேன். அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத திரைக்கதை இந்தப்படத்தின் மிகப்பெரிய பலம். நாயகனும், நாயகியும் பல காட்சிகளில் உயிரைப் பணயம் வைத்து நடித்திருக்கிறார்கள். ஹரிப்ரியா முதன்முறையாக நடிப்பிலும், கவர்ச்சியிலும் மிரட்டியிருக்கிறார்” என்றார் ஆதிராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in