ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மண்ணையும், மண் மனத்தையும் மாறாமல் படம் பிடித்து காட்டிய பாரதிராஜா, மக்கள் மனதில் ஆழமாக பதிந்த ஒரு படைப்பாளி. சிவாஜி, ரஜினி, கமல்... என்று அத்தனை ஜாம்பவான்களையும் இயக்கிய ஒரு இயக்குநர். சிறு இடைவௌிக்கு பிறகு, அன்னக்கொடி என்ற படத்தை இயக்கினார். அதன்பிறகு இப்போது மீண்டும் பிஸியாகிவிட்டார். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் கதையில், இவர் ஒரு படத்தை இயக்கி, நடிக்கவுள்ளார். கிட்டத்தட்ட, கிழக்கு சீமையிலே படம் போன்று இப்படம் உருவாக இருக்கிறது. அடுத்தமாதம் மைசூரில் படம் துவங்குகிறது.
இதனையடுத்து ஓல்டுமேன்(OM) என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகிறார். அமெரிக்கா, லண்டன் போன்ற பல்வேறு நாடுகளில் படப்பிடிப்பு நடக்கிறது. இப்படத்தை பாரதிராஜாவின் உதவியாளரும், சலீம் இயக்குநருமான நிர்மல் குமார் இயக்குவார் என தெரிகிறது. மேலும் தனது மேற்பார்வையில் தனது மகன் மனோஜ் இயக்கும் சிகப்பு ரோஜாக்கள்-2 படத்தையும் கவனிக்க இருக்கிறார்.
ஆக மீண்டும் தமிழ் சினிமாவில் பாரதிராஜா பிஸியாகிவிட்டார்.