மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது; மத்திய அரசு அறிவிப்பு | மலையாள சினிமாவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'லோகா' | சைஸ் ஜீரோ தோற்றத்துக்கு மாறும் தமன்னா | ஜனநாயகன் படத்தில் மூன்று விஷயங்களை எதிர்பார்க்கலாம் : சொல்கிறார் வினோத் | ‛வீரம்' குழந்தை நட்சத்திரம் யுவினா நடிக்கும் ரைட் | 40 வருட இடைவெளி : அன்று நாயகன், இன்று வில்லன் | புதிய படங்களில் தொடரும் இளையராஜா பாடல்கள் | நாளை நடிகர் சங்க பொதுக்குழு : எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, ஜி.வி.பிரகாஷ் கவுரவிப்பு | அனிருத்துக்கும் எனக்கும் போட்டியா : சாய் அபயங்கர் சொன்ன நச் பதில் | 5 படங்கள் ரிலீஸ் ஆகியும் ஓபனிங் இல்லாத முதல்நாள் வசூல் |
காவலன் - இது சித்திக் இயக்கத்தில் விஜய் - அசின் ஜோடி இணைந்திருக்கும் புதிய படத்திற்கான நாமகரணம். காவல்காரன், காவல் காதல் என மீடியாக்களே புதிய புதிய பெயர்ளை மேற்படி படத்திற்கு சூட்ட... பொறுக்க முடியாமல் மீடியாக்களை கூட்டி காவலன் எனும் டைட்டிலை அறிவித்துள்ளனர் இயக்குனர் சித்திக், விஜய், அசின், வடிவேலு, ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம், தயாரிப்பாளர் ரோமேஷ் பாபு உள்ளிட்ட காவலன் டீம்.
டைட்டில் அறிமுக விழா எனும் பெயரில் சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற காவலன் விழாவில் பேசிய விஜய், டைட்டில் அறிமுக விழா என்பது ச்சும்மா சாக்குபோக்குதான். பத்திரிகை மற்றும் மீடியாக்களை சந்தித்து ரொம்ப நாட்கள் ஆகி விட்டது. 105 நாட்கள் காவலன் சூட்டிங்கை நடத்தி முடித்து விட்டு, உங்களை சந்திக்காமல் இருப்பது எங்களுக்குத்தான் நஷ்டம் என்பதை உணர்ந்துதான் இந்த சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். காவல்காரன் என்றுதான் முதலில் இந்த படத்திற்கு பெயர் சூட்டினோம். பின்னர் ஒரு சில காரணங்களால் அது மாற்றப்பட வேண்டிய நிலை. அதற்குள் சிலர் காவல் காதல், காதல் காவல் என்றெல்லாம் மீடியாக்களில் டைட்டில் சொல்ல ஆரம்பித்து விட்டனர். அது எல்லாம் யாரு வெச்ச டைட்டில் என்பதே தெரியவில்லை. அதனால்தான் உடனடியாக இந்த சந்திப்பு. இந்த கதையை இயக்குனர் சித்திக் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பே என்னிடம் சொன்னார். அது இப்பொழுதுதான் படமாகி இருக்கிறது. இடையில் இதே கதையை அவர் மலையாளாத்தில் பாடிகாட் என்ற பெயரில் எடுத்து வெற்றியும் பெற்று விட்டார். அதுவும் நல்லதுதான். இதன் தாமதத்திற்கு அசின்தான் இதில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என காத்திருந்ததும் ஒரு காரணம். வடஇந்தியாவில் அவங்க பிஸி அல்லவா? என்று அசினை பார்த்து சிரித்தபடி பேசி முடித்தார் விஜய்! குசும்புதான்.
இதே நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்க வந்த மீடியாக்கள் அசினிடம் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சிரித்துக் கொண்டே பதில் அளித்த அசின், கொழும்பு சென்றது குறித்தும், அதற்கு இங்கு விதிக்கப்பட்டிருக்கும் தடைகள் குறித்தும் கேட்டபோது முகம் மாறினார். அவர் முகம் மாறுவதை பார்த்த நிகழ்ச்சி தொகுப்பாளர், இங்கு காவலன் படம் சம்பந்தமாக பேசுவதற்காக கூடியிருக்கிறோம். நிருபர்கள் அதுபற்றி மட்டுமே கேட்பது நல்லது. உங்களுக்கு எத்தனை விதங்களில் வேண்டுமானாலும் புகைப்படம் எடுக்க அசின் ஒத்துழைப்பு தருவார். ஆனால் கொழும்பு பற்றிய கேள்வி மட்டும் கேட்காதீர்கள் என்றார். அதையடுத்து போட்டோவுக்கு பலவித போஸ் கொடுத்துவிட்டு எஸ் ஆனார் அசின். டைரக்டர் சித்திக்கிடம் இலங்கை- அசின் தடை பற்றி கேட்டபோது எனக்கு படத்தை முடிக்கணும், முடிச்சிட்டேன். இனிதான் மற்றவை பற்றி யோசிப்பேன், என்று மழுப்பினார்.