படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
நடிகர் விஜய்யின் 51வது படமாக உருவாகி வரும் காவலன் டிசம்பரில் ரீலிஸ் ஆகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி விருந்தாக காவலன் படம் வெளிவரும் என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் ரீலிஸ் தேதி தள்ளிவைக்கப்பட உள்ளது. காவல் காரன், காவல் காதல் என பல தலைப்புகளுக்கு பிறகு காவலன் என்ற தலைப்பில் உருவாகி வரும் இப்படத்தை டைரக்டர் சித்திக் இயக்கி வருகிறார். இறுதிகட்ட சூட்டிங்கில் பிஸியாக இருக்கும் டைரக்டர் சித்திக், இப்படத்திற்காக நடிகை அசின் கொடுத்த தேதிகளை வைத்துக் கொண்டு மளமளவென சூட்டிங்கை முடித்து வருகிறார். காரைக்குடி, கும்பகோணம், வேலூர், மலேசியா, பாங்காக் என 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இறுதிகட்டமாக கேரளா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் படப்பிடிப்பை நடத்த காவலன் டீம் திட்டமிட்டுள்ளது. டிசம்பரில் காவலனை அதிரடியாக திரையிடும் திட்டத்துடன் விறுவிறுப்பாக பணிகள் நடந்து வருகின்றனவாம்.